என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்-கலெக்டர் உத்தரவு
- மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அதிகாரத்தை கலெக்டர் வழங்கினார்.
- புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவகங்கை
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய அடை மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் சிவ கங்கை மாவட்டத்திலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மழையின் தாக்கத்திற்கு ஏற்றாற்போல் பள்ளிகளை இயக்குவது தொடர்பாக அந்தந்த பகுதி தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், சூழ்நி லைக்கு தகுந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? அல்லது பள்ளிகளை நடத்தலாமா? என்று தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரி–வித்துள்ளார்.
இது சிவகங்கை மாவட்டத்தில் புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






