என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டையில் கள்ளக்காதலி மீது ‘ஆசிட்’ வீசியவரை மேற்குவங்காளத்தில் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
    தேவகோட்டை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி(வயது35). இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரித்து தாயுடன் வசித்து வந்தார்.

    முத்துராமலட்சுமி ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது போடிநாயக்கனூரை சேர்ந்த செல்வம் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    செல்வமும் ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    அவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்து ராமலட்சுமி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு செல்வம் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று செல்வம் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முத்து ராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆசிட் வீசியதால் முகம் வெந்துபோன முத்துராம லட்சுமி வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் என்பதால் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்தார். தன் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து நெல்லை போலீசாரிடம் முத்துராமலட்சுமி புகார் செய்தார்.

    ஆசிட் வீசிய சம்பவம் தேவகோட்டையில் நடந்து இருப்பதால் அதுபற்றி சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துராமலட்சுமி வசித்து வந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ஆசிட் வீச்சு தொடர்பாக முத்துராமலட்சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    செல்வம் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது செல்போனை கண்காணித்தப்படி இருந்தனர். அதில் அவர் மேற்கு வங்காளத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தேவகோட்டை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு சென்று செல்வத்தை கைது செய்தனர்.

    மேற்குவங்காளத்தில் கைது செய்யப்பட்ட செல்வத்தை போலீசார் தேவகோட்டைக்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய பிறகு தேவகோட்டை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் செல்வம் அடைக்கப்பட்டார்.

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மண்டலம் தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகம் மூலம் தாயமங்கலம் முத்துமாரியம்மன்  கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் வருகிற 29-3-2022 முதல் 7-4-2022 வரை இயக்கப்படுகிறது.

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா 29-3-2022 முதல் 7-4.2022 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பெரும் திரளாக வருகை தரும் பக்தர்களின் வசதியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  காரைக்குடி மண்ட லம் சார்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, காளையார்கோவில், இளையான்குடி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து 29-3-2022 முதல் 7-4-2022 வரை இரவு&பகலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை கும்பகோணம்   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர்  தெரிவித்துள்ளார்.
    தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே  உள்ள கோட்டூர் கிராமத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. 

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா  விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு  திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    திருகாப்பு கட்டுதலைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது. 

    விழாவின் ஒரு பகுதியாக 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  மேலும் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். 

    இந்த நிகழ்ச் சியில் தேவகோட்டை பெரியகாரை, அடசிவயல், கோட்டூர், நயினார்வயல், கள்ளிக்குடி, நாகாடி புதுக்கோட்டை, திருமண வயல், பரமக்குடி மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றியுள்ள 100&க்கும் மேற் பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இறுதி விழாவாக பூச்சொரிதல்விழா, அம்மன் திருவீதிஉலா, அதனை தொடர்ந்து பால்குடம், காவடி, தீச்சட்டியும், இரவு முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமையும், மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற உள்ளது. 

    இதேபோன்று முளைப்பாரி திருவிழா கோட்டூர், நாகாடி பெரியகாரை, கள்ளிக்குடி அடசிவயல், சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடைபெறுகிறது.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
    திருப்பத்தூர் 

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமுதாய கூடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கணினி திருத்தம் மற்றும் பட்டாமாறுதல் சிறப்புமுகாம் நடைபெற்றது.

    முகாமில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் சிவசம்போ, மண்டல துணைவட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர், துணை கலெக்டர் வேலுமணி,  பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவை வழங்கி னார்.

     முகாமில் திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, கவுன்சிலர்கள் சையது முகம்மது ராபின், நேரு, அபுதாகிர், கோமதி சண்முகம், சரண்யா ஹரி, கண்ணன், ஷமீம், சாந்தி சோமசுந்தரம், சீனிவாசன், ஏகாம்பாள் கணேசன், ரெமி சுலை மான், நாகசுந்தரி திருஞான சம்பந்தம்,  பாண்டியன் மற்றும் வருவாய் ஆய்வாளர் மன்சூர்அலி, கிராமநிர்வாக அலுவலர் குணசேகரன், மணிகண்டன், வெங்கடேஷ் (எ) முத்துக்கருப்பன், உமா மகேஸ்வரி, பாலமுருகன், சீனிவாசன், நிலஅளவர் மகேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

     முகாமில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 37 கணினி பட்டாமாறுதல் மனுக்கள் பெறப்பட்டு அதில் 5மனுக்கள் உடனடி தீர்வாக பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.

    திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலி மீது ஆசிட் வீசிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராம லட்சுமி(வயது35). இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரித்து தாயுடன் வசித்து வந்தார்.

    முத்துராமலட்சுமி ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது போடிநாயக்கனூரை சேர்ந்த செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணம் ஆகவில்லை.

    செல்வமும் ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இதனால் அவரும், முத்துராமலட்சுமியும் சேர்ந்து ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    அவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்து ராமலட்சுமி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு செல்வம் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று செல்வம் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முத்து ராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆசிட் வீசியதால் முகம் வெந்துபோன முத்துராமலட்சுமி வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் என்பதால் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்தார். தன் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து நெல்லை போலீசாரிடம் முத்துராமலட்சுமி புகார் செய்தார்.

    ஆசிட் வீசிய சம்பவம் தேவகோட்டையில் நடந்து இருப்பதால் அதுபற்றி சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துராமலட்சுமி வசித்து வந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ஆசிட் வீச்சு தொடர்பாக முத்துராமலட்சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரை பிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    செல்வம் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது செல்போன் மூலம் போலீசார் துப்புதுலக்கி வருகின்றனர்.

    சிவகங்கையில் ரூ.92 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 166 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 93கோடி மதிப்பிலான 23ஆயிரத்து 553 நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

     தமிழக முதல்வரால் மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய ஆணையிட்டதன்படி சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்கள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு, கடன் பெற்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 23 ஆயிரத்து 553 கடன்களுக்கு ரூ. 93.05 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, கடன்தாரர்களுக்கு அவர்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் நகைகள் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

    மொத்தஎடை 5 பவுனுக்கு உட்பட்டு, கடன்பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களை அணகி நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பட்டா கணினி திருத்த முகாம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்களாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு பட்டா கணினி திருத்த முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியகலா தலைமையில் நடைபெற்றது. 

    முகாமில் பெயர் திருத்தம், உட்பிரிவு மாற்றம், விவசாய நிலம், வீட்டுமனை போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்காக 34 மனுக்கள் பெறப்பட்டு அதில் உடனடியாக 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மீதம் உள்ள மனுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் இடத்தில் வருவாய்த்துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 

    டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்றசெயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர்களான ஆறுமுகம், சிவசங்கரி, அழகுமீனா, அழகம்மாள், ஜெயலட்சுமி, மற்றும் பணித் தள பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 
    பட்டா கணினி திருத்த முகாம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்களாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு பட்டா கணினி திருத்த முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியகலா தலைமையில் நடைபெற்றது. 

    முகாமில் பெயர் திருத்தம், உட்பிரிவு மாற்றம், விவசாய நிலம், வீட்டுமனை போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்காக 34 மனுக்கள் பெறப்பட்டு அதில் உடனடியாக 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மீதம் உள்ள மனுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் இடத்தில் வருவாய்த்துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 

    டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்றசெயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர்களான ஆறுமுகம், சிவசங்கரி, அழகுமீனா, அழகம்மாள், ஜெயலட்சுமி, மற்றும் பணித் தள பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 
    சிவகங்கையில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    காரைக்குடி

    முதல்வர் மு.க.ஸ்டா லினின்  பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி என்.ஜி.ஓ. காலனி மைதானத்தில் நடந்தது. 

    முதல் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் தென்னவன் தொடங்கி வைத்தார். 2ம் நாள் போட்டிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி  வைத்தார்.

    இதில் மொத்தம் 24அணிகள் கலந்துகொண்டன. நாக்அவுட் முறையில் நடை பெற்ற  போட்டிகளில் பெரியகோட்டை எம்.சி.சி.சி. அணியும், காரைக்குடி பிளாஸ்டர் வாரியர்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் பெரியகோட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

    2ம் பரிசை பிளாஸ்டர் வாரியர்ஸ் அணியும், 3ம் பரிசை தினேஷ் நினைவு கழனிவாசல் அணியும், 4-ம் பரிசை டி.கே.எம். மணி பிரதர்ஸ் அண்ணாநகர் அணியும் தட்டிச் சென்றன. 

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் தலைமை தாங்கி கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துஷாந்த் பிரதீப்குமார், சேதுபதி ராஜா, ரவி, பொற்கோ, தமிழ்நம்பி முன்னிலை வகித்தனர்.

    நகரசெயலாளர் குணசேகரன், நகர்மன்ற தலைவர் முத்துதுரை, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் பவானி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சத்யா ராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமா செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணாத்தாள், தெய்வானை உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் ஜான் பீட்டர்,  பிரசன்னா, தாய்சீனா, தினகரன் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.
    முதலிடம் பெற்ற அணி சிவகங்கை மாவட்டம் சார்பில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறது.
    நெடுமரம் பஞ்சுவிரட்டு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் மஞ்சு விரட்டு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில் மலையரசி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற பங்குனி 10ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் மஞ்சுவிரட்டை நெடுமரம், சில்லாம்பட்டி, ஊக்குளத்தான்பட்டி, உடையநாதபுரம், என்.புதூர் உள்ளிட்ட 5 கிராமத்தார்கள் நடத்துவார்கள்.  அதேபோன்று பங்குனி 16ந்தேதி நடைபெறும் மஞ்சுவிரட்டு நெடுமரம் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நடத்துவார்கள். 

    இந்த 2 மஞ்சுவிரட்டுகள் தொடர்பாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கத்தில்   வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனை   கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருப்பத்தூர் காவல் துணைகண்காணிப்பாளர் ஆத்மநாதன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, நெடுமரம் ஊராட்சிமன்ற தலைவர்  மாணிக்கவாசகம், திருப்புத்தூர் நகர காவல் ஆய்வாளர்   சுந்தரமகாலிங்கம், சுகாதாரத்துறை அலுவலர்கள்  மற்றும் நெடுமரம் கிராம முக்கியஸ்தர்கள்,   மஞ்சுவிரட்டு நடத்தும் அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர், கால்நடை துறை,   வருவாய் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மஞ்சுவிரட்டை பாதுகாப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் நெடுமரம் மஞ்சுவிரட்டு நடத்தும்   அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாலோசித்தனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளுவார்கள்  என்பதால் அதற்கான   வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    காரைக்குடியில் வீடு புகுந்து வக்கீல் உள்பட 3 பேரை அரிவாள் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் குமரகுரு (வயது32). இவரது மனைவி விஜயஸ்ரீ (24). இருவரும் வழக்கறிஞராக பணிபுரிகின்றனர். 

    இவர்களது எதிர் வீட்டில் வசித்து வருபவர் காசி. அவரது மனைவி வாணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசியுடன் வாழப்பிடிக்காமல் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வழக்கறிஞர்கள் தம்பதிதான் காரணம் என்று நினைத்த காசியின் தம்பி கணபதி நேற்று இரவு அவரது உறவினரான விக்கி, வெங்கடேஷ், முத்துப்பாண்டி ஆகியோருடன் வந்து குமரகுரு மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தியுள்ளர். 

    அப்போது அங்கு வந்த குமரகுருவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த குமரகுருவின் மனைவி விஜயஸ்ரீ, அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு கையிலும், தலையிலும் வெட்டு விழுந்தது. 

    காயமடைந்த வழக்கறிஞர் தம்பதியினர் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், மாரியப்பன் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

    காரைக்குடி டி.எஸ்.பி., வினோஜி தப்பி ஓடிய குற்ற வாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    தேவகோட்டையில் செயல்படாத உழவர்சந்தையை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை அருகே உழவர்சந்தை உள்ளது. இங்கு அதிக அளவில் வியாபாரிகள்  வராததால் செயல்படாமல் இருந்தது. 

    வாரச்சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக உழவர் சந்தை கட்டிடத்தை வார சந்தைக்கு வரும் வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். 

    ஆனால் சில மாதங்களாக உழவர்சந்தை அதிகாரிகள் எங்களது பகுதிக்குள் வார சந்தையில் வியாபாரிகள் கடைகளை போடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உழவர் சந்தை முன்புற வாசல் பகுதியை அடைத்து பின்பக்கமாக காம்பவுண்ட் சுவரை உடைத்து புதிதாக பாதை ஏற்படுத்தி அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். 

    இதனால் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் வாரச்சந்தையில் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

    இந்த உழவர் சந்தைக்கு நிர்வாக அலுவலர்கள் 2 பேர், காவலர்கள் 2 பேர் என 4 பணியாளர்கள் தற்போது வரை உழவர் சந்தையில் பணியாற்றி வருகின்றனர்.

    உழவர் சந்தையில் வியாபாரிகள் ஒருவர்கூட வராதபட்சத்தில் பல ஆண்டுகளாக இந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இவர்கள் உழவர் சந்தை கட்டிடங்களை பாதுகாப்பதற்காக மட்டுமே இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    வியாபாரிகளே இல்லாத  உழவர்சந்தைக்கு பணியாளர்கள் உள்ளது அரசுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இதே போல் மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளை அதிகாரிகள் கண்காணிக்குமாறு  சமூக ஆர்வலர்  ராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.
    ×