என் மலர்
சிவகங்கை
நெற்குப்பை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் திருப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பழமையான இந்த கோவில் புனரமைத்து புதிதாக ராஜகோபுரம் மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமானங்கள் கட்டி முடித்து திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக கோவில் அருகே பிரமாண்ட யாக சாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்து புண்ணியாக பூஜையுடன் யாக பூஜை கள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு யாகங்கள் நடைபெற்று நிறைவாக யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாகுதி அளிக்கப்பட்டன.
இதனையடுத்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமானம் கலசங்களுக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விமானக் கலசத்திற்கு பட்டு வஸ்திரம் பூ மாலைகள் சாற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவர் வெங்கடாசலபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பா பிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ராமசெல்வம் செட்டியார், ரத்தினம் செட்டியார், சிங்காரம் செட்டியார் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நாட்டார், நகரத்தார்கள் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் புசலான், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந் திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பக்கமுள்ள சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசுவரி. இவரது கணவர் உதய சூரியனன் இறந்து விட்டார். இதனால் புவனேசுவரி மனநிலை சரியில்லாத தனது மகள் சுகன்யா (வயது 28)வுடன் வசித்து வருகிறார்.
சுதந்திரபுரம் அருகே உள்ள புளியங்குடியிருப்பு வெடத்தையனார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு நடந்த அன்னதானத்தில் சாப்பிட சென்று வருவதாக கூறி சுகன்யா நேற்று மதியம் வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இரவு ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். இந்நிலையில் சுதந்திரபுரம் முந்திரி காட்டிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தனர்.
அப்போது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? என்று விசாரித்தபோது காணாமல் போன சுகன்யா தான் என்பது தெரியவந்தது. அவர் அங்கு வந்தார்? அவரை யார் கொலை செய்தது? என்பது தெரியவில்லை.
அவரது ஆடை கிழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தார். இதனால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த கோணத்திலேயே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகன்யா கொலை செய்யப்பட்ட தகவல் சுதந்திரபுரம் பகுதியில் பரவியது. அதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதுவயல்- அறந்தாங்கி சாலையில் மறியல் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஆனால் வெகுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பக்கமுள்ள சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசுவரி. இவரது கணவர் உதய சூரியனன் இறந்து விட்டார். இதனால் புவனேசுவரி மனநிலை சரியில்லாத தனது மகள் சுகன்யா (வயது 28)வுடன் வசித்து வருகிறார்.
சுதந்திரபுரம் அருகே உள்ள புளியங்குடியிருப்பு வெடத்தையனார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு நடந்த அன்னதானத்தில் சாப்பிட சென்று வருவதாக கூறி சுகன்யா நேற்று மதியம் வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இரவு ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். இந்நிலையில் சுதந்திரபுரம் முந்திரி காட்டிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தனர்.
அப்போது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? என்று விசாரித்தபோது காணாமல் போன சுகன்யா தான் என்பது தெரியவந்தது. அவர் அங்கு வந்தார்? அவரை யார் கொலை செய்தது? என்பது தெரியவில்லை.
அவரது ஆடை கிழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தார். இதனால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த கோணத்திலேயே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகன்யா கொலை செய்யப்பட்ட தகவல் சுதந்திரபுரம் பகுதியில் பரவியது. அதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதுவயல்- அறந்தாங்கி சாலையில் மறியல் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஆனால் வெகுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் ஹாக்கி போட்டி நடந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட அனைத்து விளையாட்டு மேம்பாட்டுகுழு சார்பாக மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளை அழகப்பா உட்ற்கல்வி கல்லூரி பேராசிரியர் முரளிராஜன் தொடங்கிவைத்தார்.
இதில் ஆண்களுக்கான பிரிவில் 19வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 2ம் இடத்தை அழகப்பா அரசு கலை கல்லூரியும் பெற்றது.
மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான 17வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தை சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி திருமாஞ்சோலை அரசனூர் பள்ளியும் பெற்றனர்.
பெண்களுக்கான 17வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் முதல் இடத்தினை அழகப்பா பெண்கள் மேல் நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி திருமாஞ்சோலை அரசனூர் பள்ளியும் பிடித்தன. பரிசளிப்பு விழா வில் சிவகங்கை மாவட்ட அனைத்து விளையாட்டு மேம்பாட்டுகுழு தலைவர் லூயிராஜ், செய லாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப் பைகளை வழங்கினர்.
வாராப்பூர் ஊராட்சியில் 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சி மின்னமலைப்பட்டி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 98 பயனாளிகளுக்கு ரூ.16.23 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், 33 பயனாளிகளுக்கு மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், 6 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் சார்பில் காப்பீட்டு ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
அவர் பேசுகையில், மின்னமலைப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையான சாலை வசதி, பேருந்து வசதி போன்றவற்றை நிறைவேற்றவும், இதர வசதிகளை மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதுடன், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், முதலமைச்சர் செயல்படுத்திய திட்டமான மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு வீடுதேடிச்சென்று மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது. அதேபோல், கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 5 துறைகள் ஒருங்கிணைந்து, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், விவசாயிகள் வேளாண்மைப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, பணிகள் துவங்கும் முன் கூட்டுறவுத்துறையின் மூலம் முன்பயிர்க்கடன் வழங்கப்படுகின்றது.
இதுபோல் பல்வேறு துறைகள் மூலமாகவும் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக வேளாண் மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை ஆகிய துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையிலான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தததை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயாகுமரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சின்னம்மாள் மென்னன், ஊராட்சி மன்றத்தலைவர் அழகம்மாள் பழனிச்சாமி, வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே உள்ள சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம் நாளை நடக்கிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள வழிவிடுபெரிய நாச்சிஅம்மன் கோவிலில் சித்திரைதிருவிழா நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இங்குள்ள காசிசிவன் கோவிலில் நாளை வியாழன் அன்று தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுபகிருதுவருட பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகமும் அன்று மாலை பிரதோஷ வழிபாடும், பக்தர்கள் காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதை தொடர்ந்து திருவிளக்கு பூஜை வழி பாடும், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் பால்குடம் ஊர்வலம் பாலாபிஷேகமும் சிறப்பு அன்னதானம்மும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.
பேச அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சியின் சிறப்புக் கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி உயர்த்துவது சம்பந்தமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். விவாதம் நடைபெறாமல் கூட்டத்தை தலைவர் முடித்து விட்டதால் ஆவேச மடைந்த அ.தி.மு.க. கவுன் சிலர்கள் பிரகாஷ், தேவன், குருபாலு, அமுதா, ராதா, கனகவள்ளி ஆகியோர் கொட்டும் மழையில் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப் பாட்டத்தில ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், தலைவர் உரை முடிந்து உறுப்பினர்கள் பேச முயலும்போது சுகாதார ஆய்வாளர் சுந்தர் குறுக்கிட்டு அரசு கொண்டு வந்துள்ள மஞ்சள்பை திட்டத்தை கூறி விழிப்புணர்வு பதாகையை தலைவர் மற்றும் துணை தலைவர் வெளியிட்டனர். பிறகு ஆணையாளர் சிவகங்கையில் நடைபெற உள்ள அரசு புத்தக கண்காட்சிக்கு அழைப்பிதழ் வழங்கியதைப் பற்றி கூறினார். பிறகு விவாதம் தொடங்கும் என நினைத்தோம். ஆனால் தலைவர் முத்துதுரை விவாதம் நடத்தாமலே தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டதாக சொல்லி கூட்டத்தை முடிந்ததாக கூறி வெளியேறிவிட்டார்.
கூட்டம் ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் பாடலும், இறுதியில் தேசியகீதமும் பாடப்பட வேண்டும் என்பது நடைமுறை. அதையும் கடை பிடிக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோம் என்றனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையில் கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நாளை (13ந்தேதி) தேவகோட்டை வட்டத்தில் திரானி, விரிசூர் மற்றும் உருவாட்டி கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் நெடுமறம், பட்டாக்குறிச்சி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் பில்லூர் மற்றும் அரசனூர் கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் காரைக்குளம், மேலத் துறையூர் கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் ஒய்யவந்தான் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
பொதுமக்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்புமுகாமில் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 40வது மாநில அளவிலான சப்-ஜூனியர் மற்றும் சீனியர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டிகள் 3நாட்கள் நடந்தன.
இதில் வீரர்கள் 350 பேரும், வீராங்கனைகள் 290பேரும் கலந்து கொண்டனர். தொடக்கவிழாவில் மாநில பொதுச்செயலாளர் முரளி கிருஷ்ணா வரவேற்றார். இந்திய சிலம்ப சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையேற்று அணிவகுப்பை பார்வையிட்டார்.
அவர் பேசுகையில், சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கல்ல்லூரிகளில் மற்றும் வேலைவாய்ப்புகளில் 3சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு வழங்கப்படும் சான்றிதழ் முக்கியமானதாகும். விரைவில் சிலம்பாட்ட புரோலீக் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
பல்வேறு பிரிவு போட்டிகளை ஊரக வளச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத்-தலைவர் குணசேகரன் ஆகியோர் தெடங்கி வைத்தனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருவள்ளூர் மாவட்டமும் 2ம் இடத்தை புதுக்கோட்டை மாவட்டமும், 3ம் இடத்தை தஞ்சாவூர் மாவட்டமும் வென்றன.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு தலைமை வகித்தார். தொழிலதிபர் படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ துரைராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் மாநிலசெயலாளர் துரை கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
சிலம்பாட்டக்கழக நிர்வாகிகள், போட்டிகளின் இயக்குநர்கள், நடுவர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.
அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 19-ந் தேதி நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2022ம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 19ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை, மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள “சிவகங்கை புத்தகத் திருவிழா&2022” நிகழ்விற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அரங்கத்தில் கலெக்டரின் ஆணைக்கிணங்க பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு (அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும்) தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்டஅளவில் நடைபெறும் இந்தபோட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி-களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 19ந்தேதி காலை 9.30 மணியில் இருந்தும், கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டி மதியம் 1.30 மணியில் இருந்தும் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் இந்த பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 30 மாணாக்கர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதுதொடர்பில், கீழ்நிலை அளவில் முதன்-மைக்கல்வி அலுவலரால் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டிக்கு 30பேர் கொண்ட மாணாக்கர்பட்டியல் முதன்மைக்கல்வி அலுவலரால் போட்டிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.
எனவே, பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணாக்கர்கள் உரிய வட்டாரக் கல்வி அலுவலர்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.
கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டியில் ஒரு கல்லூரியில் இருந்து இருவர் மட்டுமே பங்கேற்க முடியும். இது தொடர்பில் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துக் கல்லூரிகளின் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்) முதல்வர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து சுற்றறிக்கையும் போட்டியில் பங்கேற்பதற்கான படிவம் மற்றும் விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களே பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமை தாங்கி சமரசம் தொடர்பான விளம்பர பலகை திறந்து வைத்தார்.
சமரச விழிப்புணர்வு தொடர்பான ஒளி, ஒலி பதிவினை வெளியிட்டும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னர்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் முதன்மை மாவட்ட நீதிபதிசுமதி சாய் பிரியா பேசுகையில், முன்னர் கூட்டுக்குடும்பமாக இருந்த போது கட்டுப்பாடுகளுடன் இருந்தோம். நமக்குள்ள பிரச்சினைகளை நாமே தீர்வு கண்டோம். இன்றைய சூழ்நிலையில் தனி, தனியாக இருப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாமல் நீதிமன்றத்திற்கு வழக்குகள் வருகிறது.
சமரச மைத்தில் சம்பந்தப்பட்டவர்களே பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். பயிற்சி பெற்ற சமரசர்கள் இருதரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சினை-களுக்கு ஆலோசனை வழங்கி தீர்வு காண வழிவகை செய்கின்றனர் என்றார்.
இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன தன்னர்வலர்கள் கலந்து கொண்டனர்.
காவல் துறையை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை நடமாடும் வாகனம் மூலம் சமரசம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த பேரணி ஒருங்-கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக போக்சோ நீதிமன்றம் வரை நடைபெற்று நீதிமன்ற வளாகத்தில் முடிவு-பெற்றது. சார்பு நீதிபதி பரமேஸ்வரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், போக்சோ நீதிபதி பாபுலால், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுசார்பு நீதிபதி செயலாளர் பரமேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், சிறப்பு நீதிபதி உதயவேலவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி பாரத தேவி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி முகாம், நூலகம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடந்த 28வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், முதலமைச்சர் உத்தரவின்படி, 12.9.2022 முதல் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12-9-2021 முதல் 2-4-2022 வரை 27 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 7 லட்சத்து 27 ஆயிரத்து 980 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 16.1.2021 முதல் 7.4.2022 வரை மொத்தம் 19 லட்சத்து 60 ஆயிரத்து 765 தடுப்பூசிகள் செலுத்தப்-பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 10.1.2022 முதல் 8 ஆயிரத்து 790 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை அவசியம் செலுத்திக் கொண்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதியிலுள்ள நூலகத்தில் கலெக்டர் பார்வையிட்டு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நூலகத்தினுள் இருந்த புத்தக வாசகர்கள் மற்றும் தேர்வுக்கு தயராகும் தேர்வாளர்களிடம் தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் உள்ளனவா என்பது குறித்தும், இந்த நூலகத்தை மேம்படுத்த வேண்டிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்-பணிகள்) ராம்கணேஷ், நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவர் பிரியதர்சினி ஜெபராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னமருது, மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் கடைகள், நிறுவன பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்து.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தசட்டத்தின்படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் பணிநேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கைவசதி செய்து தரப்பட வேண் டும்.
எனவே பணியாளர்களைபணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக இந்த சட்டத்திருத்தத்தினை நடைமுறைப்படுத்து மாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர் களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த சட்டத்திருத்தத்தினை கடைபிடிக்க தவறும் நிறுவன உரிமையாளர்கள்மீது மேற்கண்ட சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடை நிறுவன சட்டத்தின்கீழ் பராமரிக்கப்பட வேண்டிய வேலையமைப்பு பதிவேடு, சம்பளபதிவேடு, விடுப்பு விவரங்கள் பதிவேடு ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் முறையாக பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






