search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாதான கூட்டம்"

    • திருப்புல்லாணி டாஸ்மாக் கடை 2 மாதத்துக்குள் அகற்றப்படும் என சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
    • 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கூறி பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இந்த நிலையில் டாஸ்மாக் கடை முன்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து கீழக்கரை தாசில்தார் சரவணன் ஏற்பாட்டில் சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் திருப்பு ல்லாணி கோவில் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து எஸ்.டி. பி.ஐ. கட்சி நிர்வாகிகள் விளக்கினர். இறைத்தொடர்ந்து 2மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள் வதாக டாஸ்மாக் தாசில் தார் சேதுராமன் உறுதி அளித்தார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினர்.

    இதில் கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார், கோட்ட ஆய அலுவலர் கல்யாண குமார் கீழக்கரை இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் பெரியபட்டினம் தலைவர் முகமது மீராசா, பொரு ளாளர் சையது இப்ராம்ஷா, கீழக்கரை நிர்வாகிகள் சுல்தான் சிக்கந்தர், சாதிக் அலி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கொடி கம்பத்தை அமைத்துள்ளனர்.
    • மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அங்குள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கொடி கம்பத்தை அமைத்துள்ளனர்.

    இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கொடி கம்பத்தை வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திர மூலம் இடித்து அகற்றினர்.

    • 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    • வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு தர்மக்குடிகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் இருக்கின்ற அனைத்து கழிவுநீர்களையும் தர்மகுடிகாடு பகுதி வழியாக கொண்டு சென்று வெள்ளாற்றில் கலக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்ததாக கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலந்து சென்றனர். திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காடு அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் திட்டக்குடி நகராட்சியிடம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி தர கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று திட்டக்குடி நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர துணைத் தலைவர் பரமகுரு மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழை நீரை வடிக்கால் வழியாக தர்மக்குடிகாட்டில் இருந்து வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு உட்பட்ட அப்பகுதி மக்கள் 6-வது வார்டு உறுப்பினர் நவீன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி காவியா, இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட க்காரர்கள் தற்போது தற்காலிகமாக இந்த வழியாக பள்ளம் தோண்டப்பட்டால் விரைவில் திட்டக்குடி நகராட்சி சாக்கடை நீர் அனைத்தும் இவ் வழியாக தான் அருகிலுள்ள வெள்ளா ற்றிக்கு செல்லும் எனவே இவ்வழியாக வடிகால் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சார்பில் தற்போது பருவ மழை தொடங்கிய தால் சாலை ஓரம் உள்ள மழை நீரை மட்டும் செல்வதற்கு தற்காலிகமாக பள்ளம் தோண்டி வெள்ளா ற்றில் மழை நீரை விடுவதாக தெரிவித்தனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவி த்ததால் இதுகுறித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக த்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என டிஎஸ்பி காவியா தெரிவி த்தார். இதையடுத்து போராட்ட க்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.
    • குப்பைகளை கொட்டுவதன் மூலம் அந்த பகுதியில் தீப்பற்றி எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் உ.வாடிப்பட்டி கிராமத்தில் உசிலம்பட்டி நகராட்சி குப்பையை கொட்டுவதை நிறுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.

    இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு, வட்டாட்சியர் கருப்பையா, நகராட்சி ஆணையாளர் முத்து, தாலுகா காவல் ஆய்வாளர், உத்தப்பநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர், நகராட்சி தலைவர் சகுந்தலா, கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராணி மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    இதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. நகராட்சி குப்பைகளை உத்தப்பநாயக்கனூர் கிராமம் உ.வாடிப்பட்டி பகுதியில் கொட்டுவதன் மூலம் அந்த பகுதியில் தீப்பற்றி எரிவதை உடனடியாக தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    குப்பைகள் சேகரிக்கும் இடத்தின் 4 புறங்களிலும் காமிரா பொருத்தி மீண்டும் தீ ஏற்படாத வகையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குப்பை கிடங்கினை பொதுமக்கள் நலன் கருதி மாற்று இடம் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மூலம் கலெக்டருக்கு முன்மொழிய கருத்துரு அனுப்ப வேண்டும். உசிலம்பட்டி நகராட்சிக்கு மாற்று குப்பைக் கிடங்கு இடம் தேர்வு குறித்து முதற்கட்ட பணியினை 3 மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.

    மேற்கண்ட முடிவுகள் அனைத்து தரப்பினராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து இன்று (12-ந் தேதி) கிராம மக்கள் சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×