search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace crowd"

    • உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.
    • குப்பைகளை கொட்டுவதன் மூலம் அந்த பகுதியில் தீப்பற்றி எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் உ.வாடிப்பட்டி கிராமத்தில் உசிலம்பட்டி நகராட்சி குப்பையை கொட்டுவதை நிறுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.

    இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு, வட்டாட்சியர் கருப்பையா, நகராட்சி ஆணையாளர் முத்து, தாலுகா காவல் ஆய்வாளர், உத்தப்பநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர், நகராட்சி தலைவர் சகுந்தலா, கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராணி மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    இதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. நகராட்சி குப்பைகளை உத்தப்பநாயக்கனூர் கிராமம் உ.வாடிப்பட்டி பகுதியில் கொட்டுவதன் மூலம் அந்த பகுதியில் தீப்பற்றி எரிவதை உடனடியாக தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    குப்பைகள் சேகரிக்கும் இடத்தின் 4 புறங்களிலும் காமிரா பொருத்தி மீண்டும் தீ ஏற்படாத வகையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குப்பை கிடங்கினை பொதுமக்கள் நலன் கருதி மாற்று இடம் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மூலம் கலெக்டருக்கு முன்மொழிய கருத்துரு அனுப்ப வேண்டும். உசிலம்பட்டி நகராட்சிக்கு மாற்று குப்பைக் கிடங்கு இடம் தேர்வு குறித்து முதற்கட்ட பணியினை 3 மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.

    மேற்கண்ட முடிவுகள் அனைத்து தரப்பினராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து இன்று (12-ந் தேதி) கிராம மக்கள் சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×