என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இந்த விருதுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் "2023-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது" வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கீழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    விதிமுறைகள் வருமாறு:- அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்த திருநங்கைகள், தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கீழச்சீவல்பட்டியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு மாத்திரை வழங்கினர். இதில் காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராம்குமார், கால்நடை மருத்துவர்கள் பிரதீப், அருண், ஸ்ரீநாத், செல்வநாயகி, ரஞ்சிதா, கால்நடை அலுவலக ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் குழுவினரால் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது.
    • போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டில் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேலும் பாத்திரங்கள், பேன் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டபோது படுக்கையறையில் வாலிபர் ஒருவர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.

    படுக்கையறை அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்தன. போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பினர். தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த வாலிபர் தன் முன்னே போலீசார் நிற்பதை கண்டு திருதிருவென முழித்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது27) என்பது தெரியவந்தது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த இவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்துள்ளார்.

    பின்னர் வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது. அதன்படி இரண்டையும் சாப்பிட்ட பின் அவனுக்கு போதை தலைக்கு ஏறியது. சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என படுக்கையறையில் சுதந்திரநாதன் தூங்கியது தெரியவந்தது. போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.

    திருட வந்த வீட்டில் வாலிபர் தூங்கி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை கைது செய்த வீடியோவும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    • திருட வருவதற்கு முன்பாக மது குடித்துள்ளார்.
    • போலீசார் சென்று எழுப்பி அவரை கைது செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசேன். இவர் தனது தொழில் சம்பந்தமாக காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வருகிறார். நேற்று மதியம் நடுவிக்கோட்டையில் உள்ள அவரது பூட்டிய வீட்டில் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. அக்கம்பக்கத்தினர் இதை கவனித்து, நாச்சியார்புரம் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசாரும், வெங்கடேசனும் அங்கு விரைந்து சென்று, வீட்டை திறந்து உள்ளே செனறு பார்த்தபோது, படுக்கை அறையில் 27 வயது வாலிபர் குறட்டைவிட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

    அவரது அருகில் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, டேபிள் பேன் உள்ளிட்ட பொருட்கள் ஒரு இடத்தில் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் தட்டி எழுப்பினர். கண் விழித்து பார்த்தபோது, தன் முன்பு போலீசார் நிற்பதை கண்ட வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். திருட வந்த இடத்தில் அயந்து தூங்கியதால் சிக்கிக்கொண்டோமே என நினைத்து திருதிருவென விழித்தார்.

    போதையில் இருந்த அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன்(வயது27) என தெரியவந்தது. அவர், வெங்கடசேன் வீட்டிற்கு திருட வருவதற்கு முன்பாக மது குடித்துள்ளார். கையோடு கூடுதலாக மதுபாட்டில், பிரியாணி வாங்கிவிட்டு திருட வந்துள்ளார்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் மீது ஏறி ஓடுகளை பிரித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து பேன், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, மொத்தமாக அள்ளிச்செல்ல ஒரு இடத்தில் வைத்துள்ளார்.

    வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக செல்லலாம்.... இப்போது என்ன அவசரம்... என கருதிய சுதந்திரதிருநாதன், களைப்பாக இருந்ததால் அங்கிருந்த படுக்கை அறைக்கு சென்று மதுவை குடித்ததுடன், பின்னர் தான் கொண்டு வந்த பிரியாணியையும் ருசித்து சாப்பிட்டுள்ளார். உண்ட மயக்கத்தால் ஒரு குட்டித்தூக்கம் போட நினைத்து, மெத்தையில் படுத்தார். நீண்டநேரம் தூங்கியதால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதந்திரதிருநாதனை கைது செய்தனர்.

    • பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பாலிசி பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ரூபவ் வேளாண்மை துறையின் சார்பில் ரூபவ் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூபவ் 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ரூபவ் பாலிசி பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பயர் காப்பீடு பாலிசி பத்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 60 ஆயிரத்து 109 விவசாயிகளால் 63 ஆயிரத்து 50.72 எக்டேர் பரப்பளவிலான நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ள பிரிமியம் தொகை, அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் மானிய தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை முதலான விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங் கள் விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரூபவ் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பாலிசி பத்திரங்கள் ரூபவ் பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை துறையி னரால் அந்தந்த வட்டாரங்க ளிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படு கிறது.

    காப்பீடு செய்துள்ள விவசாயிகள் தங்களின் பாலிசி பத்திரங்களை நேரடியாக பெற்று அதில்கு றிப்பிடப்பட்டுள்ள காப்பீடு குறித்த விபரங்களை சரி பார்த்து உறுதி செய்து பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி மாங்குடி பதவியேற்றார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இதில் தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் போட்டியிட்டனர்.இதில் வெற்றி பெற்றதாக முதலில் தேவி மாங்குடிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதற்கு பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தேவி மாங்குடி இல்லாமல் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு முதலில் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் வேறொருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தேவி மாங்குடி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதிகள் வெற்றி பெற்றதாக ஒருவருக்கு சான்றிதழ் வழங்கியபின் மற்றொருவருக்கு சான்றிதழ் வழங்க முடியாது எனவே 2-வதாக வழங்கப்பட்ட சான்றிதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இதையடுத்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பிரியதர்சினி அய்யப்பன் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். சுவாய், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

    தேவி மாங்குடி தரப்பில் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜரானார்.பிரியதர்ஷினி அய்யப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வசந்த் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்க ளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஐகோர்ட் கிளை உத்தரவில் நாங்கள் தலையிட விரும்ப வில்லை, எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.உச்சநீதிமன்ற தீர்ப்பை யடுத்து தன்னை பதவியேற்க அனுமதிக்கும்படி தேவி மாங்குடி தரப்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் அனுமதியின்பேரில் சங்கரா புரம் ஊராட்சி மன்ற தலைவ ராக தேவி மாங்குடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சாக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா பதவிப் பிரமா ணம் செய்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், துணை பி.டி.ஓ பொன்னுச்சாமி, முன்னாள் ஆணையாளர் கேசவன் உள்பட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • விவசாய பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை ஒழிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வயலை சுற்றி கம்புகள் நட்டு அதில் வெடிகளை கட்டி வெடிக்க செய்வோம்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழமேல்குடி கிராமத்தில் பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீர்நிலை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வெள்ளமுத்து மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக பயிர்களை பன்றிகள் அழித்து வருவதால் விவசாயம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது.

    இந்த பகுதியில் 2 ஏக்கரில் விவசாயம் செய்து நெல் விளைந்த நிலையில் பன்றிகள் தினந்தோறும் பயிர்களை அழித்து வருகிறது.இரவு 3 முறை பன்றிகள் நுழைந்து நன்றாக விளைந்து நிற்கும் நெற் பயிர்களை அழித்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் 40 முதல் 50 நெல் மூடைகள் மகசூல் வரும். பன்றிகள் அழிப்பதால் விளைச்சல் பாதியாக குறையும் ஆபத்து உள்ளது.

    இரவு நேரங்களில் பன்றிகள் வராமல் தடுப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இரவு நேரத்தில் விழித்திருந்து வெடி போட்டு பன்றிகளை விரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். வயலை சுற்றி கம்புகள் நட்டு அதில் வெடிகளை கட்டி வெடிக்க செய்வோம்.

    பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க ேவண்டும்.

    இந்த பாதிப்பு தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் முறையிட்டோம்.நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதிதிராவிடர், பழங்குடியின முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25 சதவீதம் நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (NEEDS) மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசிய மயமா க்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25 சதவீதம் நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர்களிடம் இருந்து எண்ணிக்கையில் கட்டுபாடுகளின்றி விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    விண்ணப்பங்கள் வணிக நோக்கத்திற்கான (Commercial Purposes only) பயண வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஜே.சி.பி, ரோடு ரோலர், கலவை எந்திரம் டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க்லிப்ட் கருவி கள், காங்கிரீட் மிக்சர் கருவிகள், ஆழ்துளை கிணறு வாகனங்கள், நடமாடும் உணவக வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய தொழில்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை – 630 562 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33989 மற்றும் 89255 33990 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரை வழியாக மதுரை-ராமேசுவரத்துக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் பெரியநகராட்சி ஆகும். மாவட்டத்திலேயே மானாமதுரையில் இரவு பகலாக பஸ் வசதி உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை நகர பஸ்கள் வசதிகள் உள்ளது.

    தற்போது ராமேசுவரம் வரை ரெயில்கள் செல்லாத தால் மதுரையில் இருந்து வெளிமாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பஸ்சில் செல்கின்ற னர். இதனால் மதுரை-ராமேசுவரம் இடையே உள்ள திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி பகுதி பயணிகளுக்கு போதுமான பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையில் உள்ளது.

    இதில் குறிப்பாக மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் வரும் பஸ்கள் திருப்புவனம், மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. மிகபெரிய பஸ்நிலையமாக உள்ள மானாமதுரையில் இருந்து மதுரை வரை நேரடியாக பஸ் வசதி பலவருடமாக கிடையாது.

    தற்போது ராமேசு வரத்தில் இருந்து வரும் பஸ்களும் அதிக அளவில் பயணிகளுடன் வருவதால் மானாமதுரை பயணிகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணியாளர்கள் காத்திருந்து மதுரை செல்லும் நிலை உள்ளது.

    இதேபோல் காலை 10 மணி வரை மானாமதுரை யில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ்களிலும் பயணிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    கூட்டநெரிசலை தடுக்கும் வகையில் மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை கூடுதல் பஸ்களையும், மானாமதுரை பயணிகளின் நீண்டகால கோரிக்கையான மானாமதுரை-மதுரை இடையே இரவு பகலாக 4 வேளைகளில் நேரடியாக பஸ்வசதியும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானா மதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவை யான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

    காரைக்குடி:

    உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருடந்தோறும் நூதன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

    அப்போது காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.

    காதலர் தினமென்ற பேரில் பொது இடங்களில் சில காதலர்கள் தகாத செயல்களை செய்கின்றனர். இதனை கண்டித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

    • தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    • 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 11-ந்தேதி கொள்ளையர்கள் ஒரு வீட்டில் புகுந்து 2 பெண்களை கொலை செய்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ஒரு சிறுவனையும் கத்தியால் குத்தினர். அவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த கொள்ளை நடந்து ஒரு மாதம் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது தேவகோட்டை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேவ கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தியாகிகள் பூங்கா அருகில் உண்ணா விரதம் இருந்தனர்.

    அப்போது போலீசார் ஒரு மாதத்திற்குள் உண்மை யான குற்ற வாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் அறிவித்தனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. துரை தேவகோட்டையில் முகாமிட்டு இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்போது இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்று குற்றவாளிகளை தேடி வருகிறார். இன்ஸ் பெக்டர் சரவணன், பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தங்களது பகுதிகளில் அதிக அளவு கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மீண்டும் கொள்ளை

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திருப்பத்தூர் சாலையில் ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் சென்டர் என அடுத்தடுத்து 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    விரைவில் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ×