search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fruit saplings"

    • ரூ.200விலைமதிப்புள்ள பழ மரக்கன்று தொகுப்பை பயனாளிகள் ரூ.50 மட்டும் செலுத்திபெற்றுக்கொள்ளலாம்.
    • விவசாயிகள் தங்களது விவரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை மூலம் அனைத்துவட்டாரங்களிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்களின்கீழ் ரூ.200விலைமதிப்புள்ள பழ மரக்கன்று தொகுப்பை பயனாளிகள் ரூ.50 மட்டும் செலுத்திபெற்றுக்கொள்ளலாம். புரதம், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களைதரும் பழமரக்கன்றுகளான மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, மாதுளை போன்ற 5வகையான கன்றுகள் அடங்கிய தொகுப்பு ஒரு பயனாளிக்கு ஒரு தொகுப்பு வீதம்வழங்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-2024ம் ஆண்டிற்கு கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 52கிராமங்களுக்கு மட்டும் 15,600 பழ மரக்கன்று தொகுப்பு வழங்க ரூ.23.40 லட்சம் நிதிமற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் 9,170 பழ மரக்கன்று தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்க ரூ.13.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டங்களில் பயன் பெற விரும்பும் பயனாளிகள், விவசாயிகள்தங்களது விவரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவிஇயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.     

    • மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
    • ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் என். மேலையூர் கிராமத்தில் பழவகை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமூக சேவகர் வல்லத்தரசு காளிதாசன், தமிழ்செல்வி லெட்சுமணன் ஆகியோர் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் ஒவ்வொருவருக்கும் கொய்யா, எலுமிச்சை,நெல்லி சீத்தா மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் "ஊர்கூடி ஊரணி காப்போம்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வள்ளி துரைராஜ்,கலைஞர் கிராம திட்ட பொறுப்பு அலுவலர் விஜயகுமார், உதவி தோட்டகலை அலுவலர் ஜீவிதா, ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×