என் மலர்
சிவகங்கை
- சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி தர்கா சந்தனக்கூடு விழா தொடங்கியது.
- இந்த விழாவில் மும்மதத்தினர் கலந்து கொள்கின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். புதூர் ஒன்றியம் அருகே உள்ள கரிசல்பட்டியில் ஹஜரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா மதநல்லி ணக்க விழாவாக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 873-வது சந்தனக்கூடு விழா நேற்று தொடங்கியது.
இதை முன்னிட்டு கரிசல்பட்டி அருகில் உள்ள கே.புதுப்பட்டி, கரியாம் பட்டி, வலசைப்பட்டி இந்துக்களும் உள்ளூர் முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து ஊரின் மையப்பகுதியில் உள்ள மச்சி வீட்டு அம்மா தர்ஹாவிற்கு வந்தனர். அங்கிருந்து கொடி யேற்றத்திற்கான கொடி யினை அலங்கரிக்கப்பட்ட நாட்டிய வெள்ளை குதிரையின் மேல் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலம் ஹஜ்ரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா வந்தடைந்த பின் கொடி தர்ஹா உள்ளே கொண்டு செல்லப்பட்டு சிறப்பு துவா செய்த பின்னர் தர்ஹா முன்பு உள்ள கொடிமரத்தில் 10 அடி நீளமுள்ள பிரமாண்டமான கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தின்போது வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கொடி ஏற்றத்தினை தொடர்ந்து இன்றிலிந்து 10-வது நாளில் சந்தனம் பூசும் சந்தனக் கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் பங்கேற்பர்.கொடியேற்றத்தை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க நாட்டிய குதிரையின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.
- ஓரியூர் செல்லும் இலவச பஸ்கள் சரிவர இயங்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
- மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போக்கு வரத்து கழக பணிமனை உட்கோட்டத்தில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் தேவ கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படு கிறது.
அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த நிலையில் அவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தேவகோட்டையில் இருந்து வெளிமுத்தி, மணக்குடி ஊரணி கோட்டை கீழக்கோட்டை, மங்களக்குடி வழியாக ஓரியூர் வரை 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ்களில் இலவச பயணத்தால் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இலவச பயண அறிவிப்பு நாளிலிருந்து தற்போது வரை இந்த 2 டவுன் பஸ்களும் சரிவர இயங்குவ தில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இன்று காலை இந்த பஸ்சில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக ளுக்கு செல்ல முடியா மல் அவதிப்பட்டனர். இந்த டவுன் பஸ் சரிவர இயக்கப்படாததால் அதற்கு அடுத்து இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 2 டவுன் பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.
இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 நாளில் ரூ.6.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- றைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 9-ந் தேதி முதல் மாவட்ட நிா்வாகம், கலை இலக்கிய ஆா்வலா்கள் சங்கம் சார்பில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கி நேற்று (20-ந்தேதி) நிறைவடைந்தது.
முகவை சங்கமம் என்ற தலைப்பில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவில் முதல்-அமைச்சரின் திட்டங்கள் குறித்து செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இல்லம் தேடி கல்வி திட்ட அரங்குகள் உள்பட 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் எழுதிய சுமாா்2.48 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றன. மூலிகை, ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. தினமும் கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனித் திறன் போட்டிகள் நடைபெற்றன.
புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பொதுமக்கள் என 2.20 லட்சம் போ் பங்கேற்றனா். ரூ.6.35 கோடிக்கு புத்தகங்கள் விற்கப்பட்டன. கொடையாளா்கள் மூலம் 3,500 புத்தகங்கள் வரப் பெற்றன. நிறைவு விழாவில் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கலந்து கொண்டாா். நிறைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
- உதவி ஆணையர் ரத்தினவேல் சமூக பாது காப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் ( சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 275 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களில் தகுதி யுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் அறிவுறுத்தி னார்.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி வட்டத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் சமூக பாது காப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இளையான்குடி கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
- அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடந்த உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கில் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசருக்கு சிறந்த தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் என்ற விருது கிடைத்தது.
கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த நிகழ்வுகளை சிறப்பாக செய்தமைக்கான சிறந்த கல்லூரியாகவும் சாகிர் உசேன் கல்லூரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். விருது பெற்ற உதவி பேராசிரியர் நாசரை கல்லூரி ஆட்சிகுழு செயலாளர் ஜபருல்லான், ஆட்சிகுழு நிர்வாகிகள், முதல்வர் அப்பாஸ்மந்திரி ,அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக இயக்குநர் வேதிராஜன், கள ஒருங்கிணைப்பாளர் அருமைரூபன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
- நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளரின் தந்தை செல்லப்பெருமாள் காலமானார்
- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர்-பொறியாளர் வெற்றிகுமரனின் தந்தை நா.செல்ல பெருமாள் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி யளவில் மதுரை பைபாஸ் ரோடு, துரைசாமி நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த செல்லப்பெருமாளின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளு மன்ற தொகுதி மண்டலச் செயலாளர் சாயல்ராம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொரு ளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன், திருவாடானை சட்ட மன்ற தொகுதி செய லாளர் வெற்றி என்ற ஜெயச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- எஸ்.எஸ்.கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் சக்தி கணபதி, பொன்னழகி அம்மாள், வெற்றிவேல் முருகன் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பொன்னழகி அம்மன் தோரணவாயில் குதிரை மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் தொடங்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாகுதி, ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வியில் தீபாராதனை நடத்தப்பட்டது. கடம் புறப்பாடுடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்கொடி சாமியாடி, பூசாரி கருப்பசாமி, பூசாரி சின்ன காளை, மாயழகு, ஆறுமுகம் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- செய்களத்தூர் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி உற்சவத்தையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது.
- 2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோவிலில் மாசி வருடாந்திர உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் இருந்து பூஜை பெட்டி களுடன் அருகே உள்ள வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து கரகம் சுமந்து சாமியாடி படி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினர். பின்னர் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.
2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இரவு கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கோவில் குடிமக்கள் உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனர்.
மங்கள ஆராத்தி முடிந்ததும் அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவர் காமாட்சி யம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதை ணத்தொடர்ந்து காமாட்சி யம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிங்கம்புணரி, பிப்.20-
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சுவாதிஸ்ரீ (வயது 18). சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயோமேக்ஸ் பிரிவில் படித்து வந்தார்.
சுவாதிஸ்ரீயிடம் அவரது தாயார் மரகதவல்லி வீட்டு வேலை ஒழுங்காக செய்வதில்லை என்றும், சரியாக படிக்கவில்லை என்றும் கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுடன் இருந்த சுவாதி ஸ்ரீ வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுவாதிஸ்ரீயின் பாட்டி அறையின் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சுவாதி ஸ்ரீயை பார்த்து அலறினார்.தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் பிளஸ்-2 மாணவி சுவாதி ஸ்ரீ யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி சுவாதிஸ்ரீயின் தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தச்சு எந்திரங்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியா பிள்ளை நகரில் கார்த்திக் என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 35) என்பவர் அந்த வீட்டுக்கு மரத்தால் ஆன பொருட்களை கொண்டு கதவு, நிலை போன்ற வேலைகள் செய்து வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு சசிகுமார் வேலையை முடித்துவிட்டு தச்சு வேலைக்கான எந்திரங்களை அங்கேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது எந்திரங்கள் காணாததை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டு சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் காணாமல் போன எந்திரங்களை அதே கட்டிடத்தில் வேலை பார்த்த சிங்கம்புணரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (22), அவரது நண்பர் ஸ்டாலின் (30) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அ டைத்தனர்.
- சிங்கம்புணரியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் கிடைக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
- 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கை பட்டியில் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் 14 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் இந்த பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அதிகாரிகளால் பூட்டி வைக்கப்பட்டது.
கட்டப்பட்ட 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பில்லாத ஓட்டு கட்டிடத்தில் இந்த நடு நிலைப்பள்ளி தற்காலி கமாக செயல்பட்டு வரு கிறது. இங்கு மாணவ-மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி சாலையோரத்தில் மரத்தடியில் காம்பவுண்டு சுவர் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் கட்ட தகுந்த இடம் கிடைக்காததால் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும், புதிய பள்ளிக்கட்டிட பணி தொடங்காமல் தாமதமாகி வருகிறது.
எனவே மாணவ-மாணவிகளின் பெற்றோர் விரைவில் புதிய பள்ளி கட்டிடம் அமைத்து மாண வர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.






