என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தச்சு எந்திரங்களை திருடிய 2 பேர் கைது
  X

  தச்சு எந்திரங்களை திருடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தச்சு எந்திரங்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  சிங்கம்புணரி

  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியா பிள்ளை நகரில் கார்த்திக் என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 35) என்பவர் அந்த வீட்டுக்கு மரத்தால் ஆன பொருட்களை கொண்டு கதவு, நிலை போன்ற வேலைகள் செய்து வந்தார்.

  2 நாட்களுக்கு முன்பு சசிகுமார் வேலையை முடித்துவிட்டு தச்சு வேலைக்கான எந்திரங்களை அங்கேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது எந்திரங்கள் காணாததை கண்டு திடுக்கிட்டார்.

  இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டு சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  அதில் காணாமல் போன எந்திரங்களை அதே கட்டிடத்தில் வேலை பார்த்த சிங்கம்புணரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (22), அவரது நண்பர் ஸ்டாலின் (30) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அ டைத்தனர்.

  Next Story
  ×