என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பஸ்கள்"

    • அரசு டவுன் பஸ்சில் மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டியபடி நீல நிறத்தில் பஸ்கள் இயங்கி வருகிறது.
    • இனிவரும் புதிய பஸ்களின் முன்பு பிங்க் நிறம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சந்தவாசல்:

    கிராமப்புறங்களில் இயக்கப்படும் தமிழக அரசின் டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

    சில பஸ்களில் மகளிர் பஸ் என உள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த படிக்காத பெண்கள் பிங்க் நிற அரசு பஸ்களை அடையாளம் கண்டு கட்டண மில்லா பஸ் என தெரிந்து ஏறிச் செல்கின்றனர். இப்போது நீல நிறத்தில் விடப்பட்டுள்ள புத்தம் புதிய டவுன் பஸ்களை படிக்காத பெண்கள் அடையாளம் காண முடியவில்லை. எனவே இதில் பயணிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.

    கண்ணமங்கலம் படவேடு அரசு டவுன் பஸ்சில் மகளிர் விடியல் பஸ் என ஸ்டிக்கர் ஒட்டியபடி நீல நிறத்தில் பஸ்கள் இயங்கி வருகிறது.

    இது கட்டண மில்லா பஸ்சா, கட்டணம் உள்ள பஸ்சா என தெரியாத பெண்கள் குழம்பி இதில் ஏறுவதில்லை. அதேபோல் வேலூர் வாழியூர் அரசு டவுன் பஸ் புதியதாக விட்ட நீல நிற பஸ், இதில் மகளிர் விடியல் பஸ் ஸ்டிக்கர் இல்லாததால் கண்ணமங்கலம், வண்ணாங்குளம் பஸ் நிறுத்தங்களில் நிற்கும் படித்த, படிக்காத பெண்கள் இதில் கட்டணம் செலுத்த வேண்டுமா? வேண்டாமா? என புரியாமல் தவித்து குழப்பமடைந்து பஸ்சில் ஏறுவதை தவிர்த்து வருகின்றனர்.

    எனவே இனிவரும் புதிய பஸ்களின் முன்பு பிங்க் நிறம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓரியூர் செல்லும் இலவச பஸ்கள் சரிவர இயங்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
    • மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போக்கு வரத்து கழக பணிமனை உட்கோட்டத்தில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் தேவ கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படு கிறது.

    அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த நிலையில் அவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தேவகோட்டையில் இருந்து வெளிமுத்தி, மணக்குடி ஊரணி கோட்டை கீழக்கோட்டை, மங்களக்குடி வழியாக ஓரியூர் வரை 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த பஸ்களில் இலவச பயணத்தால் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இலவச பயண அறிவிப்பு நாளிலிருந்து தற்போது வரை இந்த 2 டவுன் பஸ்களும் சரிவர இயங்குவ தில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இன்று காலை இந்த பஸ்சில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக ளுக்கு செல்ல முடியா மல் அவதிப்பட்டனர். இந்த டவுன் பஸ் சரிவர இயக்கப்படாததால் அதற்கு அடுத்து இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த 2 டவுன் பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×