என் மலர்
நீங்கள் தேடியது "Free buses"
- ஓரியூர் செல்லும் இலவச பஸ்கள் சரிவர இயங்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
- மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போக்கு வரத்து கழக பணிமனை உட்கோட்டத்தில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் தேவ கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படு கிறது.
அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த நிலையில் அவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தேவகோட்டையில் இருந்து வெளிமுத்தி, மணக்குடி ஊரணி கோட்டை கீழக்கோட்டை, மங்களக்குடி வழியாக ஓரியூர் வரை 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ்களில் இலவச பயணத்தால் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இலவச பயண அறிவிப்பு நாளிலிருந்து தற்போது வரை இந்த 2 டவுன் பஸ்களும் சரிவர இயங்குவ தில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இன்று காலை இந்த பஸ்சில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக ளுக்கு செல்ல முடியா மல் அவதிப்பட்டனர். இந்த டவுன் பஸ் சரிவர இயக்கப்படாததால் அதற்கு அடுத்து இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 2 டவுன் பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






