search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officials suffering"

    • சிங்கம்புணரியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் கிடைக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
    • 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கை பட்டியில் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் 14 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் இந்த பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அதிகாரிகளால் பூட்டி வைக்கப்பட்டது.

    கட்டப்பட்ட 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பில்லாத ஓட்டு கட்டிடத்தில் இந்த நடு நிலைப்பள்ளி தற்காலி கமாக செயல்பட்டு வரு கிறது. இங்கு மாணவ-மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி சாலையோரத்தில் மரத்தடியில் காம்பவுண்டு சுவர் இல்லாமல் உள்ளது.

    இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    பள்ளி கட்டிடம் கட்ட தகுந்த இடம் கிடைக்காததால் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும், புதிய பள்ளிக்கட்டிட பணி தொடங்காமல் தாமதமாகி வருகிறது.

    எனவே மாணவ-மாணவிகளின் பெற்றோர் விரைவில் புதிய பள்ளி கட்டிடம் அமைத்து மாண வர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ×