என் மலர்tooltip icon

    சேலம்

    • தேர்தல் ஆணைய உத்தரவு படி 2024 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

    சேலம்:

    தேர்தல் ஆணைய உத்தரவு படி 2024 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    3257 ஓட்டு சாவடிகள்

    இதை தொடர்ந்து மாவட்டத்தில் 11 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள 1249 வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட 3,257 ஓட்டுச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்பட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வருகிற 2024 ஜனவரி மாதம் 1-ந் தேதி 18-ந் தேதி பூர்த்தியடைவோர் அதாவது 2005 டிசம்பர் 31-க்கு முன் பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற, மாற்று திறானாளியை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்தினர். நாளை( 5-ந் தேதியும்), தொடர்ந்து வருகிற 18, 19-ந் தேதி ஆகிய 2 நாட்களும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.

    ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பங்களை நிரப்பி வழங்கினர். தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்களை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அவருடன் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன், தாசில்தார் தாமோதரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் நடந்த வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ேமலும் இணையதளம் மூலமும், ஓட்டர் ஹெல்ப்லைன் எனும் செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . வாக்காளர்கள் பதிவை உறுதிப்படுத்த 1950 என்ற கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த விண்ணப்பங்கள் வருகிற 9-ந் தேதி வரை பெறப்பட்டு 2024 ஜனவரி 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிட தக்கது. 

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.
    • மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார்.

    சேலம், நவ:

    சேலம் அருகே கருப்பூர் சந்ப்பேதைட்டை 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(54). கூலி வேலை செய்து வரும் இவருக்கு செல்வி (40) என்ற மனைவியும், விக்னேஷ் (20), கோபிநாத் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.

    அடித்து கொலை

    கடந்த 29-ந் தேதி மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார். சுப்பிரமணி பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் சுப்பிரமணியை தாக்கி கழுத்தை நெரித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நவீன் (33). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று நவீன் மோட்டார் சைக்கிளில் அங்கம்மாள் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அருகே அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் (33). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நவீன் மோட்டார் சைக்கிளில் அங்கம்மாள் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நவீன் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி

    விழுந்து தனியார் வங்கி ஊழியர் சாவு 

    • நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் மாவட்டம்தோறும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்திட உத்தரவிட்டு உள்ளார்.
    • இந்த பாதையில் தடையின்றி நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலையானது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கவும், நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் மாவட்டம்தோறும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்திட உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி மாடர்ன் தியேட்டர் வளைவு வரை சென்று மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானா முடிய 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுகாதார நடைபயிற்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பார்த்திபன் எம்.பி., வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த பாதையில் தடையின்றி நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலையானது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையின் இருபுறமும் நடைபயிற்சியின் பயன்கள் மற்றும் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், நடைபயண தூரம் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளில் இளைப்பார அமரும் வகையில் 8 இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, துணை இயக்குநர் சுகாதார பணிகள் சவுண்டம்மாள்(சேலம்), யோகானயத்(ஆத்தூர்), துணை இயக்குநர் வளர்மதி, துணை இயக்குநர் கணபதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி வெள்ளி கொலுசு கைவினைஞர்கள் சங்க தலைவர் ஆனந்த ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், நடைபயண சங்கத்தை சார்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும்.
    • போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும். இதனால் சில ஆண்டுக்கு முன் நகர் பகுதியில் பல சாலைகள் இருவழி சாலையாக மாற்றப்பட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக தாலுகா, பி.டி.ஓ. அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பிரதான சாலையில் பாதசாரிகளுக்கு இடையூறாக சரக்கு ஆட்டோக்கள், கார், கனரக வாகனங்களை நடைபாதையில் வாகன ஓட்டிகள் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் பாதசாரிகள் வெள்ளை கோட்டை தாண்டி சாலையின் நடுவே நடந்து செல்லும் நிலை உள்ளது. 2 வாகனங்கள் ஒன்றாக வரும்பொழுது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு வாகன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பி.டி.ஓ அலுவலகம், போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது. அதில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வெள்ளைக்கோட்டை தாண்டி சாலை நடுவே செல்லும் சூழல் ஏற்படுகிறது. அதனால் விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த போலீஸ் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சங்கிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கூறுகையில் இந்த சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நின்று செல்கின்றனர். சாலையை சரக்கு வாகனங்கள் காலை முதலே ஆக்கிரமித்துக் கொள்வதால் அந்த வழியாக நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே போலீசார் இந்த சாலையில் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 18, சங்ககிரி 9, கெங்கவல்லி 7, கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம் 6, ஆத்தூர் 3.2, தம்மம்பட்டி 2, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 72.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • சக்தி (42). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

    மதுபழக்கம்

    இவருக்கு மணிமுடி (35) என்ற மனைவியும், 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

    சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் சக்தி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

    அடித்து கொலை

    அப்போது அவர் மனைவி மணிமுடியை தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த மகளையும் சக்தி தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிமுடி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து கணவர் தலையில் பலமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சக்தி சரிந்து விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தியின் மனைவி மணிமுடியை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    வாக்குமூலம்

    எனது கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் என்னை, மகளையும் தாக்க முயன்றதுடன் வீட்டில் கேனில் வைத்திருந்த மண்எண்ணையை எங்கள் மீது ஊற்றி தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கடப்பாரை எடுத்து கணவரின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சரிந்து விழுந்து இறந்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மணிமுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள 32,000- க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும். நுகர்வோருக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை 2-ம் பணி தொகுதி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பிறகு 16.5.2023 வரை பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டபடி வழங்கிட வேண்டும். இ- டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் அனைத்து தொழிற்சங்க தொழி லாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது.
    • அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் மற்றும் அதிகாரிகள் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து குறைகளை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் சந்தை நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
    • தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளை மாநாடு சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தாசில்தார், ஆர்.டி.ஓ. கலெக்டர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின், இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.  

    ×