சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக பிருந்தா பதவியேற்பு

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
துணை போலீஸ் கமிஷனராக எஸ்.பிருந்தா பதவி ஏற்ற காட்சி.
துணை போலீஸ் கமிஷனராக எஸ்.பிருந்தா பதவி ஏற்ற காட்சி.
Published on

சேலம்:

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த எஸ். பிருந்தா பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று எஸ்.பிருந்தா சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் விஜயகுமாரி மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், போலீசாரும் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com