இடையபட்டி ஊராட்சியில் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதி

இடையப்பட்டி ஊராட்சி வடக்கு வீதியில் சாலை அமைக்கும் பணிகள் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இடையப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியதால் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.
இடையபட்டி ஊராட்சியில் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் அவதி
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் இடையப்பட்டி ஊராட்சி வடக்கு வீதியில் சாலை அமைக்கும் பணிகள் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இடையப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியதால் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் நிறைவு செய்து போக்குவரத்து மற்றும் மழைநீர் வடிகால் வசதிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com