என் மலர்
சேலம்
- 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த மழையின் காரணமாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1450 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1224 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக உள்ளது.
கபினி அணைக்கு நீர்வரத்து 221 கன அடியாகவும் நீர்வெளியேற்றம் 1500 கன அடியாகவும் உள்ளது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.
- சின்னகடை வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இந்த ஆய்வின்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
சேலம்:
சென்னை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுரைக்கிணங்க, கூடுதல் தொழிலாளர் கமிஷனர் தமிழரசி மற்றும் சேலம் தொழிலாளர் இணை கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் உத்தரவின்பேரில் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்)
கிருஷ்ணவேணி தலைமையில் காவல் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர், மேட்டூர் மற்றும் ஆத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதில் கந்தம்பட்டி பைபாஸ், அடிவாரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, சின்னகடை வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
எச்சரிக்கை
14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த தகவலை சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
- பயிர்களால் நொதிப்பு தன்மை ஏற்பட்டு தண்ணீர் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.
- 16 கண் மதகு பகுதியில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி, மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி., நீர்த்தேக்க பரப்பளவு 60 சதுர மைல்களாகும்.
அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் செல்லும் போது கரையோரத்தில் உள்ள விவசாயிகள் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம்.இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயரும் போது விவசாய பயிர்கள் நீரில் விடுகின்றன.
இதனால் மூழ்கிய பயிர்களால் நொதிப்பு தன்மை ஏற்பட்டு தண்ணீர் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மேட்டூர் அணையின் வலது கரை, இடதுகரை, 16 கண் மதகு பகுதியில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இவ்வாறு தெளிக் கப்படும் நுண்ணுயிர் கலவையால் நன்மை செய்யும் நுண்ணுயிரி பன்மடங்கு பெருக்கமடைந்து ஆல்கே எனும் பாசிகளை முழுமையாக கட்டுபடுத்தி இப்பகுதியில் வீசும் துர்நாற்றம் படிப்படியாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குறைந்த அளவு பணம் கொடுத்தால் அதிகம் பணம் தருவதாக கூறி அவரிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
- பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.55 லட்சம் கொடுப்பதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). தொழில் அதிபர். சேலத்தில் உள்ள இவருடைய நண்பர் மூலம் ஒரு கும்பல் இவருக்கு அறிமுகமாகி உள்ளது.
ஆசை வார்த்தை
பின்னர் அந்த கும்பல், குறைந்த அளவு பணம் கொடுத்தால் அதிகம் பணம் தருவதாக கூறி அவரிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.55 லட்சம் கொடுப்பதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி வெங்கடேஷ் ரூ.50 லட்சம் பணத்துடன் காங்கேயத்தில் இருந்து சேலத்திற்கு காரில் வந்து கொண்டு இருந்தார். சேலம் இரும்பாலை அருகே வந்த போது எதிரே ஒரு காரில் போலீஸ் உடை அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று கூறி அவரிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அவர் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை பறித்துக்கொண்டனர். பின்னர் இந்த பணத்திற்கு உரிய விளக்கம் அளிக்க இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி விட்டு அந்த கும்பல் காரில் சென்று விட்டது.
போலி போலீஸ்
இதுகுறித்து அவர் இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பணம் பறித்து சென்றவர்கள் போலீசார் இல்லை என்பதும், போலி போலீஸ் என்பதும் தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என்று கூறி ரூ.50 லட்சம் பறித்து சென்ற திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மோகன்பாரதி (26), வினித்குமார் (27), அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்துமணி (30), காங்கேயத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் (24), சிவகாசியை சேர்ந்த கணேசன் (58), குமார் (41) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இந்த கும்பலின் தலைவன் உள்பட சிலர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கும்பலை பிடிக்க கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
5 பேரிடம் விசாரணை
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 5 பேர் நே ற்று போலீசாரிடம் சிக்கினர். பின்னர் தனிப்படை போலீசார் அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் ப றிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. சிக்கிய 5 பேரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- முதல் மாடியில் உள்ள உடல் காய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு வார்டில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்தது.
சேலம்:
சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தீ விபத்து
இந்த நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ள உடல் காய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு வார்டில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்தது.
இதனால் அந்த அறை முழுவதும் கரும் புகை சூழ்ந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனாலும் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு. வார்டு முழுவதும் ஏ.சி. அறையாக உள்ளதால் புகை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் முதல் மற்றும் 2-ம் மாடியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து புகை வெளியே செல்ல தீயணைப்பு வீரர்கள் வழி வகை செய்தனர்.
இதற்கிடையே அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த 55 நோயாளிகளை பாதுகாப்பாக வீல்சேர் மற்றும் ஸ்டெச்சர் மூலம் தீவிர சிகிச்சை பிரிவின் மஞ்சள் பிரிவிற்கு கொண்டு வந்தனர்.
இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி. மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். மீண்டும் தீ விபத்து நடந்த அறையினை சீரமைக்கும் முயற்சியில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாலிபர் பலி
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சின்னனூரை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சதீஷ்குமார் (32)விபத்தில் காயம் அடைந்து தீ விபத்து நடந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தீ விபத்தால் வேறு வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் இறந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இறந்து போன சதீஷ்குமாருக்கு மைதிலி என்ற மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும் அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தால் இடமாற்றம் செய்யும் போது உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வேறுஇடத்திற்கு மாற்றியதால் கணவர் உயிரிழந்ததாகவும், இதனால் தனது குடும்ப த்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த தீ விபத்து குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் மணி கூறியதாவது-
அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த எனது தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று தொடங்கி உள்ளது. விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகைள் தொடரும்.
தீ விபத்து நடந்த அறையில் ஆபரேசன் செய்ய 40 டேபிள்கள் உள்ளன. இதில் 5 டேபிள்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது. இன்று எலும்பு முறிவு சிகிச்சை தொடர்பாக 6 ஆபரேசன் நடைபெறுகிறது. தீ விபத்தால் சேதம் அடைந்த 5 ஆபரேசன் டேபிள்கள் சீரமைக்கப்படுகிறது. விரைவில் அந்த அறைக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. குறிப்பாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3,864 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 4,107 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 63.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 63.45 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 27.32 டி.எம்.சியாக உள்ளது.
- மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு.
- உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி.
சேலம்:
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற செய்கின்ற பொறுப்பு மற்ற மாவட்டத்தை விட சேலம் மாவட்டத்திற்கு அதிகம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம். நம்முடைய இளைஞர் அணிக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது. இளைஞர் அணியின் வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு பல்வேறு இயக்கங்களில் இளைஞர் அணி இருக்கிறது. பல அணிகளும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே 1980-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞர் அணி என ஆரம்பித்தது தி.மு.க. தான். இதை தொடங்கி வைத்தவர் நம்முடைய கழக தலைவர் தான்.
அதுபோல் தி.மு.க.வில் பல அணிகள் உள்ளது. அதவாது 22 அணிகள் இருக்கிறது. ஆனால் அணிகள் இருந்ததும் அதில் முதன்மையான அணி எதுவென்றால் இளைஞர் அணி என்று கலைஞரால் பலமுறை பாராட்டப்பட்டது.
தற்போது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞரணி மன்றத்தை கோபாலபுரத்தில் தொடங்கிய நம்முடைய தலைவர் படிப்படியாக உழைத்து இன்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக, கழக தலைவராக உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு தான் அதற்கு காரணம். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது நம்முடைய இளைஞரணி என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

செயல்வீரர்கள்னா யார்? தலைவர் என்ன சொல்கிறாரோ, தலைமை என்ன சொல்கிறதோ அதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பவன் தான் உண்மையான செயல்வீரன். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு பெயர் செயல்வீரர்கள் கூட்டம். தன்னுடைய சுய நலன் பார்க்காமல் கட்சி நலனுக்காக தலைமை சொல்லிவிட்டது, தலைவர் சொல்லி விட்டார் என உத்தரவை ஏற்று களத்தில் இறங்கி அதை முதன் முதலில் செஞ்சி முடிக்கிறவன் தான் உண்மையான செயல்வீரன்.
இந்த மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு. அவருக்கு துணை நிற்பவர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் 3 பேரும். இங்கு இருக்கக்கூடிய அனைவரும் உண்மையான செயல்வீரர்கள். எனவே தலைமை சொல்வதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பது நம்முடைய கடமை.
உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி. உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று பாராட்டப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள்.
14 வயதில் 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க.வை தொடங்கினார்கள். அதன் பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சென்னை முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்தார். 1969-ம் ஆண்டு சென்னை மாவட்டத்தினுடைய வார்டு பிரதிநிதி, 1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை.
1980-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கும்போது 7 அமைப்பாளர்களில் ஒருவர். கடின உழைப்பால் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகி விட்டது. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொன்னார். இப்போது மீண்டும் அதே வாக்குறுதியை கொடுக்கிறார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விசயத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும். ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார். இதை மட்டும் செய்து விட்டார். என்னவென்று கேட்டால் அவர் இந்தியா பெயரை பாரத் என மாற்றி விட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டார் என சொல்கின்றார்.
சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து நம்முடைய தலைவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்லாமல் அந்த சி.ஏ.ஜி. அறிக்கை தயார் செய்த அத்தனை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்.
நம்முடைய மாநாட்டின் பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு கொடுத்த நம்முடைய உரிமைகள் அத்தனையும் மீட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில் ரூ.9 லட்சம் கோடி அந்த மாநிலத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செயல்வீரர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் இதயத்தை தொடும் சாவி தி.மு.க. என குட்டிக்கதை சொன்னார்.
- சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
- நாளை முகூர்த்த நாள் என்பதால் மல்லிகை பூ கிலோ 2,400 ரூபாயக்கு இன்று விற்பனையானது.
சேலம்:
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் தேவை அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் மல்லிகை பூ கிலோ 2,400 ரூபாயக்கு இன்று விற்பனையானது. இதேபோல் முல்லை பூ, ஜாதிமல்லி, காக்கட்டான், நந்தியாவட்டம், சம்பங்கி ஆகிய பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
- அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கும் தலைமை மருத்துவ மனையாக இருந்து வருகிறது.
- மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கும் தலைமை மருத்துவ மனையாக இருந்து வருகிறது. நாள்தோறும் சுமார் 2000 -க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
கலெக்டர் ஆய்வு
இதை அறிந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு பல்வேறு இடங்களை ஆய்வு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
இன்று காலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக புகை பரவியது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக புகை பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர். மின் கசிவு ஏற்பட்ட வார்டில் இருந்த 65 நோயாளிகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பினால் நோயாளி களுக்கோ அல்லது மருத்துவ உபகரணங்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் புதிய நோயாளிகள் வருகைதரும்போது அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பணித்துறையின் மின் பிரிவு அலுவலர்கள் எவ்வாறு மின் கசிவு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவ மனையின் முதல்வர், இணை இயக்குநர் நலப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டோர் மின் கசிவு ஏற்பட்ட வார்டில் மீண்டும் இயல்பான மருத்துவச் சேவை தொடங்கி நடைபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் மணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவ லர்கள் உடனிருந்தனர்.
- விவசாய நிலத்தில் சோளத்தட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்றது.
- அப்போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சோளக்காட்டில் இருப்பது தெரியவந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சங்கிலிமுனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாப்பாத்தி.
இவரது விவசாய நிலத்தில் சோளத்தட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சோளக்காட்டில் இருப்பது தெரியவந்தது. இதனை கண்ட கிராம மக்கள் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் கட்டி மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச் சென்று தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றனர்.
- சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூரில் கன மழை பெய்தது.
- இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூரில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாநகரில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 16.2, ஏற்காடு 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில் 2, சேலம் 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 52.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
- மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,864 கனஅடியாக சரிந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,864 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 62.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 63.40 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 27.03 டி.எம்.சியாக உள்ளது.






