என் மலர்
சேலம்
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- நேற்று 103.58 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 103.57 அடியானது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே அளவில் நீடித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 992 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1223 கன அடியாக அதிகரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 103.58 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 103.57 அடியானது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
- விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, ஜுடோ, கபாடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வூசு ஆகிய விளையாட்டுக்களுக்கான 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கபப்ட்டது. அதன்படி 530-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் நிலையாக அனைத்து இனங்க ளிலும் தகுதி பெற்ற 225 விண்ணப்ப தாரர்களுக்கான 2-ம் நிலை தேர்வுகள் கடந்த ஜனவரி 29-ந்தேதி நடைபெற்றது. முதல் மற்றும் 2-ம் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 189 விண்ணப்ப தாரர்களுக்கு 3-ம் நிலை தேர்வாக வருகிற 2-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்வ தற்கான அழைப்புக் கடிதம் தபால் மூலமும், அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2-ந்தேதி காலை 7 மணிக்குள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளை யாட்ட ரங்கில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு யாதொரு மறு வாய்ப்பும் வழங்கப்படாது என்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- வெங்கடேஷ் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல், அடிக்கடி வெளியில் திருநங்கைகளுடன் சுற்றித்திரிந்துள்ளான்.
- இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் கடந்த 22-ந் தேதி விஷத்தை குடித்து விட்டான்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் வெங்கடேஷ் (17). அங்குள்ள தனியார் மீன் பண்ணையில் வேலை செய்து வந்தான்.
வெங்கடேஷ் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல், அடிக்கடி வெளியில் திருநங்கைகளுடன் சுற்றித்திரிந்துள்ளான்.
மேலும், தானும் திருநங்கையாக மாற வேண்டும் என கூறி வந்தான். இதற்கு அவனது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவனை சந்திக்க வந்த திருநங்கைகளுடன் பேச விடாமல் தடுத்ததாகவும் கூறப் படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் கடந்த 22-ந் தேதி விஷத்தை குடித்து விட்டான்.
உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினான். இந்நிலையில், இரவு மீன் பண்ணைக்கு சென்ற வெங்கடேஷ் திருநங்கையாக மாற முடியவில்லை என வருத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்தபுகாரின் பேரில், பூலாம்பட்டி போலீசார் உடலை மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், சேவகனுர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் சரத்குமார் (வயது 24). இவர் அழகுசமுத்திரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.
அந்த குதிரை வண்டியை கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன்(25), சதீஷ்(23) ஆகிய 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தபடி சமூக வலைத ளங்களில் பதிவிடுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்தனர்.அப்போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீதுமோதியது. இதில் சரத்குமார், லோகநாதன், சதீஷ், ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து சரத்குமாரின் தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் குதிரை வண்டி பந்தயம் நடத்த தடை விதித்துள்ளனர்.
- இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ராமிரெட்டிபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு தலைமைஆசிரிய ராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் 30 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சிலர் ஆசிரியருக்கு ஆதரவாக இதை தட்டிக்கேட்ட னர். இதனால் அவர்க ளுக்கிடையே மோதல் உண்டானது.
இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தாக்கப்பட்ட மாணவர்க ளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாண வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதனால் பள்ளியின் தலைமைஆசிரியர் உமாராணி 2 தரப்பு மாண வர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவர்களிடம் எழுதி வாங்கியும், பெற்றோரிடம் மாணவர்களை கண்டிக்க வும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
- தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
இங்கு கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகை–யில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் கோடைவிழா மலர்க் கண்காட்சி, லட்சக்கணக்கோனார் பார்வையிட்டு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தற்போது, கோடை காலம் தொடங்குவதால், மலர்க்கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் தோட்டக் கலைத்துறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
7 லட்சம் விதைகள்
இதுகுறித்து ஏற்காடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானது. இதற்காக, லட்சக்கணக்கில் மலர்ச்செடிகள் தேவை என்பதால், அதற்கான நடவுப் பணிகள் தொடங்கியுள்ளோம்.
கொய்மலர்கள் எனப்படும் அலங்கார மலர்ச்செடிகளான ஆஸ்டர், பால்சம், பெகோனியா, கேலண்டுலா, கார்நேசன் மேரிகோல்டு உள்ளிட்டவை சுமார் 6 லடசம் செடிகள் வளர்க்கப்பட உள்ளன.
இவற்றுக்காக 6 லட்சம் விதைகள் கொல்கத்தாவில இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும், டேலியா வகை மலர்களை உருவாக்கும் வகையில், 1 லட்சம் டேலியா மலர் நாற்றுகள், விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
மலர்ச் சிற்பங்கள்
கொய்மலர் விதைகள், டேலியா நாற்றுகள் ஆகியவற்றை, 10 ஆயிரம் மலர்ந்தொட்டிகளில் நடவு செய்யும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மலர்ச்செடிகளில சில வகைகள், 2 மாதத்திலும், சில வகைகள் 3 மாதத்திலும் பூக்கக் கூடியவை, எனவே, இப்போதே மலர்ச்செடிகளையும் விதைகளையும் நடவு செய்துள்ளோம்.
இதுதவிர, ரோஜா தோட்டத்திலும் பலவகை ரோஜாக்களைக் கொண்ட தோட்டத்தை உருவாக்க, 4 ஆயிரம் ரோஜாச் செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள புல்வெளிகளை சீரமைக்கும் பணி, புற்களால் ஆன பொம்மைகளை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் தொடங்கப் பட்டுள்ளன. கோடை விழா மலர்க் கண்காட்சியின்போது, மலர்ச் சிற்பங்கள் குறித்து திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம் இணைத்து செய்திருந்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்க்கு சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி தலைமை தாங்கினார்.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழநன், பி.டி.ஓ–கள் அன்புராஜ், வெங்கடேசன், தாசில்தார் விஸ்வநாதன், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம் இணைத்து செய்திருந்தனர். முகாமில் 437 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் முழுவதுமான மூளை வளர்ச்சி குன்றிய 25 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 3000 பெறுவதற்கான ஆணை, 4 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 12 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கண், காது, எலும்பு மற்றும் மனநலம் ஆகியவற்றை பரிசோதித்து அதில் பாதிப்பு கண்டறிந்த 139 பேருக்கு புதிய மாற்றுத்திற னாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 127 பேருக்கு தனித்துவமான அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது. 13 பேருக்கு உதவி உபகரணம் மற்றும் 20 பேருக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் விண்ணப்பித்து தரப்பட்டது.
- நெய்க்காரப்பட்டியிலிருந்து, அன்னதானப்பட்டி நோக்கி தங்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- அப்போது பட்டர் பிளை மேம்பாலம் ஏறும் போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
அன்னதானப்பட்டி:
சேலம் கொண்ட லாம்பட்டி புத்தூர், பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 39). இவரது மனைவி புஷ்பா (28) . இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கொண்டலாம்பட்டி அடுத்த நெய்க்காரப்பட்டியிலிருந்து, அன்னதானப்பட்டி நோக்கி தங்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பட்டர் பிளை மேம்பாலம் ஏறும் போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் வந்தவர் யார் ?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை. கார் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
- இங்கிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.3000 வரை விற்கப்பட்டு வந்தது.
இந்த மாதத்தில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.1200 முதல் ரூ.800 வரை என விற்கப்பட்டு வந்தது இந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பூக்கள் வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அனைத்து வகையான பூக்களின் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது. பூக்கள் விலை கணிசமாக குறைந்து வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (28.2.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : குண்டு மல்லிகை - ரூ.500, முல்லை - ரூ.800, ஜாதி மல்லி - ரூ.500, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.140, மலை காக்கட்டான் - ரூ.80, சி.நந்தியா வட்டம் - ரூ.100, சம்பங்கி - ரூ.30, சாதா சம்பங்கி - ரூ.50, அரளி - ரூ.80, வெள்ளை அரளி - ரூ.80, மஞ்சள் அரளி - ரூ.80, செவ்வரளி - ரூ.140, ஐ.செவ்வரளி - ரூ.90, நந்தியா வட்டம் - ரூ.30, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
- கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.
சேலம்:
சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(20). இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருபா கூறும் போது, என்னுடன் வேலை பார்த்து வரும் 3 பேருக்கு 7 லட்சம் ரூபாய் வேறொரு நபரிடம் வாங்கித் தந்தேன். ஆனால் கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 3 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.
- சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
- போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய கும்பல் பெங்களுரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
சேலம்:
சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கஞ்சா கடத்தும் மர்ம நபர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய கும்பல் பெங்களுரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெங்களூரில் பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பெங்களூர் லக்கேரியை சேர்ந்த பசுவராஜ் (வயது 34), ஜெயா நகரை சேர்ந்த இஜாஸ் பாஷா (42) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஒடிசா மாநிலம் பெளாங்கீர் பகுதியில் 1 கிலோ கஞ்சா 5 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 10 கிராம் பொட்டலங்களாக பொட்டு ரூ. 200 க்கு பெங்களூர், தமிழ்நாட்டில் விற்பனை செய்ததாக கூறினர்.
இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
- இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வருகிற 7- ந் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 முன் பணம் கட்ட வேண்டும்.
வருகிற 5- ந் தேதி காலை 10 மணி முதல் 6- ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.






