என் மலர்
சேலம்
- நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது. அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
- சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
அன்னதானப்பட்டி:
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக காற்றாலை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இறக்கைகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளை கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம், சென்னார்யாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மோகன் (35) என்பவர் காரில் கண்காணித்த படி பின்னால் சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது.
இதையடுத்து 2 லாரிக–ளையும் சாலையோரமாக நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கார் டிரைவர் மோகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லாரியில் தண்ணீர் இருக்கி–றது, எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- போக்குவரத்து போலீசாருக்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மோர் மற்றும் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- சேலம் கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா அருகே நடந்தது. துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா தலைமை தாங்கி போலீசாருக்கு ஜூஸ், மோர், தர்பூசணி ஆகியவை வழங்கினார்கள்.
சேலம்:
தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக உத்தரவுப்படி கோடைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மோர் மற்றும் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் மாநகரத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா அருகே நடந்தது. துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா தலைமை தாங்கி போலீசாருக்கு ஜூஸ், மோர், தர்பூசணி ஆகியவை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜராஜசோழன், குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, சேலம் மாநகரத்தில் தினமும் 110 போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக லெமன், மோர் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக 4 மாதம் வழங்கப்படும். மேலும் தலையில் அணிந்து கொள்ள கூலிங் தொப்பி வழங்கப்பட்டது, என்றனர்.
- காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாந்தா ஜெகத் வந்த காரை வழிமறித்து வெள்ளிப் பொருட்களுடன் காரை திருடி சென்றனர்.
- சேலம் சரக டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் டவுன் கோட்டை பகுதி சேர்ந்தவர் சாந்தாஜூ ஜெகத். வெள்ளி வியாபாரியான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி தனது நண்பர்கள் சாகர் ஸ்ரீராம், சந்தோஷ் ஆகியோருடன் ஒரு காரில் ராய்ப்பூருக்கு சென்று ரூ.69 லட்சம் மதிப்பிலான 129 கிலோ வெள்ளி கட்டிகளை வாங்கிக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஆர்.செட்டிப்பட்டி மேம்பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாந்தா ஜெகத் வந்த காரை வழிமறித்து வெள்ளிப் பொருட்களுடன் காரை திருடி சென்றனர். இதுகுறித்து புகார் பேரில் சேலம் சரக டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் கேரளா மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த 16 பேர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு இவர்களிடமிருந்து 7 கிலோ வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள வெள்ளிக்கட்டிகளையும் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேரையும் போலீசார் வலைபேசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் ஒரு காரை திருடி வந்த கும்பலை சேலம் மாவட்ட போலீசார் மடக்கி பிடித்து சித்தோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களில் கோடாலி ஜெயந்த் (45),டைட்டஸ் (33), சந்தோஷ்(39), விபுன் (31) ஆகிய 4 பேரும் 129 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்தது.
இதை அறிந்த சேலம் மாவட்ட தனிப்படை போலீசார் 4 பேரையும் கடந்த 20-ந் தேதி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் காருடன் 122 கிலோ வெள்ளி கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கபப்ட்டது. இதையடுத்து அந்த வெள்ளி கட்டிகளை போலீசா பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 6 சொகுசு கார்கள், 5 செல்போன்கள், இரும்பு பைப் ஆகியவைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். வெள்ளி கட்டிகளுடன் கடத்தப்பட்ட காரை பொள்ளாச்சி பகுதியில் ஒரு பண்ணை வீட்டு பகுதியில் பல்வேறு செடி, கொடிகளை போட்டு மறைத்து வைத்திருந்தனர்.
காவலில் எடுக்கப்பட்டவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து அந்த மாவட்ட போலீசாரோடு அதிரடி சோதனை மேற்கொண்டு பொருட்கள் மீட்கப்பட்டது என்றார். மேலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற “ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்” நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்:
தமிழக அரசின் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற "ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோர்களுக்கு 8 வாரங்கள் சிறப்பு உணவாக, உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு அளிக்கவும், முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி குழந்தைகளுக்கு தேவையான தாய்பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் வரையுள்ள 468 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் தொகுப்பும், மிதமான எடை குறைவுள்ள 616 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2,581 குழந்தைகளுக்கு தொகுப்பும் வழங்கப்படுகிறது.
சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தக்கூடிய உணவு என்பது யுனிசெப் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட வழுவழுப்பான பசை (paste) போன்று இருக்கும் உணவுப் பொருளாகும். இதில், அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில், தாய்மார்களுக்கான சிறப்பு ஆரோக்கிய உணவுக் கலவை, இரும்புச் சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியன அடங்கியிருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர் நல அலுவலர் யோகானந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
- சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.
செய்முறை தேர்வு தொடங்கியது
இதனிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.
இதேபோல் 18,830 மாணவர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆர்வம்
செய்முறை தேர்வில் இம் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர். பள்ளி ஆய்வகத்தில் மாணவ- மாணவிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட செய்முறையை உடனுக்குடன் ஆய்வு செய்து காட்டினர்.
ஒரு சில பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று, தேர்வு முறையாக நடைபெறுகிறதா?, ஆய்வக கூடத்தில் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், செய்முறை தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அட்டவணை
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், மனையியல், ெதாழிற்கல்வி, உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனி அட்டவணைகளில் மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மேற்கொண்டுள்ளனர்.
- கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், டோல்கேட் பகுதியில் மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை, ஹார்டுவேர் கடைகள் உள்ளன.
- இதில் 5 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை நடந்துள்ளது.
கருப்பூர்:
சேலம் மாநகரம் கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், டோல்கேட் பகுதியில் மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை, ஹார்டுவேர் கடைகள் உள்ளன. இதில் 5 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை நடந்துள்ளது.
பணம்-பொருட்கள் திருட்டு
கடைகளின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம ஆசாமிகள் கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது மற்றும் மளிகை பொருட்கள், செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறப்பதற்கு வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சி.சி.டி.வி. காமிராக்கள் காட்சி ஆய்வு
இதுபற்றிய தகவலின் பேரில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் கடையில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக கருப்பூர் சுற்று பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
இதுவரை 63 பவுன் நகை, பணம் திருடு போய் உள்ளன. போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொல்லிமலை ஆகிய வனப் பகுதிகளில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கத்தால் வனத்தில் உள்ள குட்டைகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை யொட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது.
- வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகளுக்கு வனகிராமங்களில் உள்ள கிணறுகளின் அருகே கட்டப்பட்டுள்ள தொட்டியில் கிணற்றில் இருந்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டையில் தண்ணீர் விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஏற்காடு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, மேட்டூர், ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை ஆகிய வனப் பகுதிகளில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கத்தால் வனத்தில் உள்ள குட்டைகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை யொட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது.
இப்படி கிராமங்களில் தண்ணீர் குடிக்க வரும் மான்கள் கிணற்றில் தவறி விழுந்தும், நாய்கள் துரத்திச் சென்று கடிப்பதாலும் இறந்தும் விடுகிறது. இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பல நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வாழப்பாடி வனத்தில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு மாடுகள், கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகளுக்கு வனகிராமங்களில் உள்ள கிணறுகளின் அருகே கட்டப்பட்டுள்ள தொட்டியில் கிணற்றில் இருந்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டையில் தண்ணீர் விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் திடீர் என தீ பிடித்து வருகிறது. இதனை வன ஊழியர்கள் அணைத்து வருகின்றனர். வனப் பகுதியில் தீ பிடிக்கும் பொருட்களை மக்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.
- தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் துறை டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக ஓமலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் குவிந்து காத்திருந்தனர். அப்போது முன்னதாக சென்ற சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால், அவர் மக்களிடம் மனுக்களை வாங்காமல் சென்றதால், பொதுமக்கள் அனைவரும் அங்குமிங்கும் சுற்றி அலைந்தனர்.
இதனிடையே ஆன்லைன் கலந்துரையாடல் முடித்து வெளியே வந்த டி.ஐ.ஜி ராஜேஸ்வரி காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அங்கு கூடிநின்ற இளைஞர்களை அழைத்து, அவர்களிடம் இருந்த மனுக்களை பெற்றுகொண்டார்.
தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதாவிற்கு உத்தரவிட்டார்.
அந்த புகார் மனுவில் பச்சனம்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் அரசு சார்பில் செய்யப்படும் எந்த ஒரு திட்டப்பணிகளையும் செய்ய விடாமல் தடுக்கிறார். மேலும், அக்கம் பக்கம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
- ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நடைபெறுவது வழக்கம்.
- கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலக்கட்டத்தில் எருதாட்டம் தடைபட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானூர் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலக்கட்டத்தில் எருதாட்டம் தடைபட்டது. இந்த ஆண்டு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து எருதாட்டம் துவங்கியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 30 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றது.
இளைஞர்கள் காளைகளை கழுத்தில் கயிறு கட்டி கோவிலை சுற்றி வந்து பொம்மைகள் காட்டி விளையாடினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு எருதாட்ட நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். விழாவிற்கு தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
- பராசக்தி நகர் பங்களா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
- ரத்தினம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட், பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 56). இவர் பராசக்தி நகர் பங்களா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் காட்டில் வேலை செய்தபோது ஊஞ்சக்காடு ராமசாமி பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் (64) என்பவர் வீட்டின் விசேஷத்திற்காக வாழைத் தார்கள் பார்க்க வந்தார்.
அப்போது ரத்தினம்மாள் காட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் வாழைத் தார் ஏதும் பார்க்க வேண்டாம் என அவரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர்
ரத்தினம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. சத்தம் கேட்டு காட்டில் வேலை செய்யும் பெண்கள் அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதில் படுகாயமடைந்த ரத்தினம்மாள் லைன்மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பெண்களை துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் ஜெயவேலை கைது செய்தனர்.
- விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது.
சேலம்:
நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டா லும், 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு நேர டியாக செலுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில்...
இந்த திட்டத்தின் 13-வது தவணையாக ரூ.16,800 கோடியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) விடுவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கிடைத்துள்ளது. ஹோலி பண்டிகை மற்றும் குறுவை அறுவடையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விவசாய தேவைகளுக்காக தலா ரூ.2 ஆயிரம் வீதம் உதவித்தொகை அவர்க ளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் 11 மற்றும் 12-வது தவணை நிதி கடந்த ஆண்டு முறையே மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டன.
கிராமப்புற வளர்ச்சி
இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டு இருப்பதாக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது.
கிராமப்புற பொருளா தார வளர்ச்சி, விவசாயிக ளுக்கு கடன் தடைகளைத் தளர்த்துதல், விவசாய முதலீடுகளை உயர்த்தியது போன்ற பயன்களை இந்த திட்டம் வழங்கியிருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, விவசாயிகளின் இடர் நீக்கும் திறனை அதிகரித்து, அதிக உற்பத்தி முதலீடுகளுக்கு வழிவகுத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
- விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது.
சேலம்:
நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டா லும், 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு நேர டியாக செலுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில்...
இந்த திட்டத்தின் 13-வது தவணையாக ரூ.16,800 கோடியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) விடுவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கிடைத்துள்ளது. ஹோலி பண்டிகை மற்றும் குறுவை அறுவடையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விவசாய தேவைகளுக்காக தலா ரூ.2 ஆயிரம் வீதம் உதவித்தொகை அவர்க ளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் 11 மற்றும் 12-வது தவணை நிதி கடந்த ஆண்டு முறையே மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டன.
கிராமப்புற வளர்ச்சி
இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டு இருப்பதாக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது.
கிராமப்புற பொருளா தார வளர்ச்சி, விவசாயிக ளுக்கு கடன் தடைகளைத் தளர்த்துதல், விவசாய முதலீடுகளை உயர்த்தியது போன்ற பயன்களை இந்த திட்டம் வழங்கியிருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, விவசாயிகளின் இடர் நீக்கும் திறனை அதிகரித்து, அதிக உற்பத்தி முதலீடுகளுக்கு வழிவகுத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.






