என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullfight at the festival"

    • ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நடைபெறுவது வழக்கம்.
    • கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலக்கட்டத்தில் எருதாட்டம் தடைபட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானூர் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலக்கட்டத்தில் எருதாட்டம் தடைபட்டது. இந்த ஆண்டு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து எருதாட்டம் துவங்கியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 30 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றது.

    இளைஞர்கள் காளைகளை கழுத்தில் கயிறு கட்டி கோவிலை சுற்றி வந்து பொம்மைகள் காட்டி விளையாடினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு எருதாட்ட நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். விழாவிற்கு தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    ×