என் மலர்
சேலம்
- தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.
சேலம்:
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.
- ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறு மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.
- ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கு பட்டி ஊராட்சி மூங்கிலேரிபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மரகதம்(வயது 31).
இவர் ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறூ மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்து அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து கண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கணவர் பால்ராஜ் மூங்கிலேரிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரிடம் சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும் பணம் பெற்ற நாள் முதல் இது வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். தொடர்ந்து ராமன் நாங்கள் குடியிருக்கும் வீட்டை எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டுகிறார்.
இது குறித்து ஏற்கனவே சேலம் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்து விசாரணையில் உள்ளது. அடிக்கடி எங்களை மிரட்டுவதால் நாங்கள் தற்போது அங்கு இல்லாமல் தீவட்டிபட்டியில் உள்ள எனது தாய் வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார். எனவே இதுபற்றி நடவ–டிக்கை எடுக்க வேணும்.
இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை.
- கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரகிரி மலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள்.
திருப்பணிகள்
கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மலை மீதுள்ள குமரகிரி முருகனை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் ஸ்ரீ ஆய்வு
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த கோவில் திருப்பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் பணிகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த நாட்களில் அம்மாபேட்டை, உடையாபட்டி, பொன்னம் மாப்பேட்டை உட்பட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காவடி எடுத்து வந்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்வார்கள். திருப்பணிகள் காரணமாக திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது.
வருகிற ஏப்ரல் மாதம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் இந்த கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனால் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் மலை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி காமராஜ்நகரில் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறது.
இக்கோவிலில் பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது. அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.
இந்நிகழ்வு, காண்போரை பரவசமூட்டும் வகையில் அமைந்தது. பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியில் குல தெய்வமான பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஆடு,கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இளம் தம்பதிகள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, உறவினர்களை அழைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.
நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு, நேற்று முன்தினம் திரண்டு சென்ற வாழப்பாடி பகுதி மக்கள், முப்பூஜை வழிபாடு நடத்தியதும். பெரியாண்டிச்சி அம்மன் கோயிலிலுள்ள முன்னடியான் என அழைக்கப்படும் கருப்பனார் சுவாமிக்கு மதுபானம் படையலில் வைத்து வழிபாடு நடத்தியதும் குறிப்பிடதக்கதாகும்.
இதுகுறித்து, வாழப்பாடி புதுப்பாளையம் சரவணன், அக்ரஹாரம் அங்கமுத்து, கலைச்செல்வி ஆகியோர் கூறியதாவது:
பணி நிமித்தமாக பல்வேறு பகுதியில் வசித்து வரும் உறவினர்களை, ஒரே இடத்தில் சந்தித்து உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒட்டு மொத்த பங்காளிகளின் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா கொண்டாடுவதை முன்னோர்கள் வழியில் தொடர்ந்து வருகிறோம்.
100 குடும்பங்களை சேர்ந்த உறவுகள் ஒன்றிணைந்து குல தெய்வ முப்பூஜை வழிபாடு நடத்தியது பெரும் மகிழ்ச்சி–யை ஏற்படுத்தியதோடு, உறவை பலப்படுத்தி ஒற்று–மையை அதிகரித்துள்ளது' என்றனர்.
- ஆத்தூர் கோட்ட வனத்துறை சார்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளா–கத்தில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரிய–சாமி, காட்டுத் தீத்தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு முறை குறித்து பயிற்சி அளித்தார்.
வாழப்பாடி:
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கவும், தீயணைப்பு முன்னேற்பா–டுகள் குறித்தும் வனத்துறை களப்பணியாளர்கள், வனக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ–லர்களுக்கு, தீயணைப்பு துறையுடன் இணைந்து பயிற்சி அளிக்க அறிவுறுத்–தப்பட்டு உள்ளது.
அதன்படி ஆத்தூர் கோட்ட வனத்துறை சார்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளா–கத்தில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமிற்கு, ஆத்தூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் முருகன் தலைமை வகித்தார். தும்பல் வனச்சரகர் விமல் குமார் வரவேற்றார்.
வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரிய–சாமி, காட்டுத் தீத்தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு முறை குறித்து பயிற்சி அளித்தார்.
பயிற்சி முகாமில், ஆத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறை களப்பணி–யாளர்கள், வனக்குழு தலைவர், உறுப்பினர்கள், தன்னார்வர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம். இவரை கடந்த நவம்பர் மாதம் நகராட்சி அலுவலத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
- இந்த சம்பவத்தில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அடுத்த குள்ள வீரன் பட்டி சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம். இவரை கடந்த நவம்பர் மாதம் நகராட்சி அலுவலத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடாஜலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி ஏற்கனவே 6 பேரை மேட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த உதயகுமார், எடப்பாடியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 2 பேரையும் மேட்டூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
- இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). வெள்ளித் தொழிலாளி.
இவர் சேலம் சிவதாபுரத்தில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மூர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ-மாணவிகள் கல்வியை தொடர உதவித் ெதாகை வழங்கி வருகிறது.
- நேற்று முன்தினம் வரை 3 லட்சம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி–யினர் நலத்துறை சார்பில் மாணவ- மாணவிகள் கல்வியை தொடர உதவித் ெதாகை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை tnadtwscholarship.tn.gov.in. என்ற இணையதளம் வாயிலாக கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி ெதாடங்கியது.
3 லட்சம் பேர்
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 3 லட்சம் மாணவ- மாண–விகள் விண்ணப்பித்துள்ள–னர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் ஏராளமா–னோர் விண்ணப்–பித்துள்ளனர். விதிமுறைகளின்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்–கப்பட்ட ஜாதி சான்று, வருமான சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரிபார்க்கப்படும்.
இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது ெதாடர்பாக வீடியோ வெளியி–டப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்–படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.
- இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார்.
சேலம்:
சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.
இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார்.
கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தர விடப்பட்டது . அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .
இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.
- புதிய மகளிர் குழு உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- முகாமில் சேலம் சரக துணை பதிவாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.
சேலம்:
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் புதிய மகளிர் குழு உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் சேலம் சரக துணை பதிவாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தலைமை உரை ஆற்றினார் . அவர் பேசுகையில்,ஏற்காட்டில் உள்ள அனைத்து பழங்குடியின மகளிரும் ஏற்காடு மலைவாழ் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு முகாமின் மூலம் 25 மகளிர் சுய உதவி குழுக்களாக சுமார் 300 பேர் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். முகாமின் முடிவில் சங்க செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் சுகன்யா அவர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
- உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்
சேலம்:
சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.
இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார் . கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .
இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.
- விற்பனைக்கு வைத்திருந்த 3 சிக்கன் ரோல் 150 கிராம், பால்கோவா 5 மற்றும் 2 கிலோ லேபிள் இல்லாத சிப்ஸ் காரசேவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- உணவு மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம்:
சேலம் நெத்தி மேட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி ஒன்று உள்ளது . அங்கு நேற்று முன்தினம் வாடிக்கையாளர் தீபக் சரவணன் ஒரு வெஜ் ரோல் வாங்கினார் .
அதில் துருப்பிடித்த ஆணி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதேபோல சில நாளுக்கு முன் ஒரு வாடிக்கையாளர் சுரேஷ் என்பவர் பால்கோவா வாங்கினார். அதில் பூஞ்சான் பிடித்து கெட்டு போய் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்தது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆரோக்கிய பிரபு, சுருளி ஆகியோர் அந்த பேக்கரியில் ஆய்வு செய்தனர். உணவு மாதிரி எடுத்து உடையாபட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வுக் ஆய்வகத்திற்கு அனுப்பினார் .
விற்பனைக்கு வைத்திருந்த 3 சிக்கன் ரோல் 150 கிராம், பால்கோவா 5 மற்றும் 2 கிலோ லேபிள் இல்லாத சிப்ஸ் காரசேவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது குறித்து உணவுத்துறை அலுவலர்கள் கூறுகையில் உணவு மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பால்கோவா வாங்கியதை பிரித்து விட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இதனால் புகார்தாரர் அதை வாங்கியது? எப்போது சாப்பிட எடுத்தது எப்போது? என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.






