என் மலர்
தமிழ்நாடு
மின் மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பு- உதவி பொறியாளர், போர் மேன் சஸ்பெண்டு
- மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
- உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்
சேலம்:
சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.
இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார் . கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .
இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.