என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
    X

    கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

    • தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம். இவரை கடந்த நவம்பர் மாதம் நகராட்சி அலுவலத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
    • இந்த சம்பவத்தில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த குள்ள வீரன் பட்டி சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம். இவரை கடந்த நவம்பர் மாதம் நகராட்சி அலுவலத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடாஜலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி ஏற்கனவே 6 பேரை மேட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த உதயகுமார், எடப்பாடியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 2 பேரையும் மேட்டூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×