என் மலர்tooltip icon

    சேலம்

    • 3 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் தோட்டம் உள்ளது.
    • யாரோ ஒருவர் தீயை பற்ற வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென பரவி மூங்கிலில் பிடித்தது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே செங்கோடன் (வயது 72) என்பவருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் தோட்டம் உள்ளது. வறட்சி காலம் என்பதால் மூங்கில் சருகுகள் தோட்டத்தில் நிறைந்துள்ளது. அந்த வழியாக சென்ற நபர் யாரோ ஒருவர் தீயை பற்ற வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென பரவி மூங்கிலில் பிடித்தது. இதையடுத்து தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மூங்கில் ேதாட்டம் தீ பிளம்பாக காட்சி அளித்தது.

    இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூங்கில் தோட்டத்தில் பிடித்த தீயை பல மணி நேரம் போராடி மற்ற தோட்டங்களுக்கு பரவாமல் தீயை அணைத்தனர்.

    • ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 10-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. .
    • மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 10-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலை வர் கருணாநிதி தலை மையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி சங்கர், பேரூராட்சி இள நிலை உதவியாளர் ஜெய சேகர், துப்புரவு மேற்பா ர்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குண சேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பொது சுகா தாரப் பணிகளான மழை நீர் வடிகால்கள் தூர்வாருதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடிக்கிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,222 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,222 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 103.55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.54 அடியாக சரிந்தது.

    • சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி
    • அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 22), விசைத்தறி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பூலாவரி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த லோகநாதன் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் சாமி ஆட வந்துள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், லோகு என்ற லோகநாதன் (25), சச்சின் (20) ஆகிய 2 பேர் மீதும் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திறந்து வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே.செழியன் திறந்து வைத்தார்.

    கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ஆதி மூலம், குமார், சுரேஷ், கனகராஜ், கணேசன், தமிழ்செல்வன், முருகேசன், ஜெயராமன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் ராம கோவிந்தன், சிக்கந்தர், ராமு ,சிவ சக்திவேல்,தர்மர், விமல சேகர், முத்துசாமி, சதிஷ்குமார், செந்தில், பழனிவேல் முருகேசன், தண்டபாணி, மகேஸ்வரி, சேட்டு, கருணாநிதி உள்ளிட்டோரும், கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    • சேலம்‌ மாவட்டம்‌, கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம்‌ பகுதியில்‌ சேலம்‌- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    • பாலப்‌பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள்‌ முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்‌ கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும்‌ பாலப்பணி ஆமை வேகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.

    பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:

    இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

    இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    • எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
    • பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை சரபங்காநதிக்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பல்வேறு பக்தர்கள் அலகுகளை குத்திக்கொண்டும், கார்களை கட்டி இழுத்தும் தாவாந்தெரு காளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.

    முதலில் கோவில் பூசாரி பம்பை மேளங்கள் முழங்க ஓம் சக்தி பரா சக்தி என பக்தர்கள் கரவோசை எழுப்பிய போது பூங்கரகத்துடன் தீ மிதித்தார். பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
    • அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி “விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு” குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

    சேலம்:

    ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் சுபிக்க்ஷா, சுருமி சுபையர், சுஷ்மிதா, சுவாதி, தாமரை தர்ஷணா, வானதி, வினிதா, விஷ்ணுபிரியா, யமுனா தேவி ஆகியோர் "விவசாயத்தில் மகளிரின் முக்கியத்துவம்"குறித்து இருப்பாளி கிராமத்தில் கூட்டம் அமைத்து பெண்க–ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாணவி வினிதா "விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு" குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி "விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு" குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மனோகர் மற்றும் இந்துமதி செய்தனர்.

    • அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.
    • காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தாள்-1, தாள்-2, தாள்-3 மற்றும் நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களை மத்திய அமைச்சகங்களில் உள்ள பதவிகளில் பணி அமர்த்தி வருகிறது.

    அந்த வகையில், உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2022 அறிவிப்பு கடந்த ஆண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து தாள்-1 தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அன்று இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதிப்பெண் விபரங்களை தேர்வர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்வர்கள் தாங்கள் எழுதிய தாள்-1-ல் எடுத்த மதிப்பெண்களை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட், மார்க்ஸ் இணைப்பைக் கிளிக் செய்து தங்களின் இந்த தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த வசதி 27.02.2023 இரவு 8 மணி முதல் 13.03.2023 காலை 8 வரை மட்டுமே இருக்கும். மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    இந்த தகவலை இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1211 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1223 கனஅடியாக அதிகரித்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்மையால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1211 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1223 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 103.56 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று 103.55 அடியாக குறைந்தது.

    • சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.
    • அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.

    இதில் நதியா மற்றும் இவரது மகன் விக்ராந்த் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இழப்பீடு கேட்டு நதியா சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆட்டோ டிரைவர் வைத்திருந்த இன்ஸ்சூரன்ஸ் ஆவணங்கள் போலியானது என சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீசில் புகார் அளித்திருந்தது.

    இதையடுத்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

    • சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.
    • இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சேலம் மாநகர் காவல் துறையில், 12 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.

    மீதி 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் பணியில் இணைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×