search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு அதிகாரி பணிக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு- வருகிற 13ந்தேதி வரை பார்வையிடலாம்
    X

    மத்திய அரசு அதிகாரி பணிக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு- வருகிற 13ந்தேதி வரை பார்வையிடலாம்

    • அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.
    • காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தாள்-1, தாள்-2, தாள்-3 மற்றும் நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களை மத்திய அமைச்சகங்களில் உள்ள பதவிகளில் பணி அமர்த்தி வருகிறது.

    அந்த வகையில், உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2022 அறிவிப்பு கடந்த ஆண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து தாள்-1 தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அன்று இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதிப்பெண் விபரங்களை தேர்வர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்வர்கள் தாங்கள் எழுதிய தாள்-1-ல் எடுத்த மதிப்பெண்களை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட், மார்க்ஸ் இணைப்பைக் கிளிக் செய்து தங்களின் இந்த தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த வசதி 27.02.2023 இரவு 8 மணி முதல் 13.03.2023 காலை 8 வரை மட்டுமே இருக்கும். மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    இந்த தகவலை இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×