என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் பேரூராட்சி ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்
பொத்தனூர் பேரூராட்சியில்ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்
- ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 10-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. .
- மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 10-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலை வர் கருணாநிதி தலை மையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி சங்கர், பேரூராட்சி இள நிலை உதவியாளர் ஜெய சேகர், துப்புரவு மேற்பா ர்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குண சேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பொது சுகா தாரப் பணிகளான மழை நீர் வடிகால்கள் தூர்வாருதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவை பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.






