என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளி தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் கொள்ளை
    X

    வெள்ளி தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

    • வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
    • இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). வெள்ளித் தொழிலாளி.

    இவர் சேலம் சிவதாபுரத்தில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மூர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×