search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் மலர்கண்காட்சி ஆயத்தப் பணிகள் தொடக்கம்
    X

    ஏற்காட்டில் மலர்கண்காட்சி ஆயத்தப் பணிகள் தொடக்கம்

    • ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
    • தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

    இங்கு கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகை–யில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் கோடைவிழா மலர்க் கண்காட்சி, லட்சக்கணக்கோனார் பார்வையிட்டு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    தற்போது, கோடை காலம் தொடங்குவதால், மலர்க்கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் தோட்டக் கலைத்துறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    7 லட்சம் விதைகள்

    இதுகுறித்து ஏற்காடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானது. இதற்காக, லட்சக்கணக்கில் மலர்ச்செடிகள் தேவை என்பதால், அதற்கான நடவுப் பணிகள் தொடங்கியுள்ளோம்.

    கொய்மலர்கள் எனப்படும் அலங்கார மலர்ச்செடிகளான ஆஸ்டர், பால்சம், பெகோனியா, கேலண்டுலா, கார்நேசன் மேரிகோல்டு உள்ளிட்டவை சுமார் 6 லடசம் செடிகள் வளர்க்கப்பட உள்ளன.

    இவற்றுக்காக 6 லட்சம் விதைகள் கொல்கத்தாவில இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

    மேலும், டேலியா வகை மலர்களை உருவாக்கும் வகையில், 1 லட்சம் டேலியா மலர் நாற்றுகள், விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

    மலர்ச் சிற்பங்கள்

    கொய்மலர் விதைகள், டேலியா நாற்றுகள் ஆகியவற்றை, 10 ஆயிரம் மலர்ந்தொட்டிகளில் நடவு செய்யும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மலர்ச்செடிகளில சில வகைகள், 2 மாதத்திலும், சில வகைகள் 3 மாதத்திலும் பூக்கக் கூடியவை, எனவே, இப்போதே மலர்ச்செடிகளையும் விதைகளையும் நடவு செய்துள்ளோம்.

    இதுதவிர, ரோஜா தோட்டத்திலும் பலவகை ரோஜாக்களைக் கொண்ட தோட்டத்தை உருவாக்க, 4 ஆயிரம் ரோஜாச் செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும், அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள புல்வெளிகளை சீரமைக்கும் பணி, புற்களால் ஆன பொம்மைகளை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் தொடங்கப் பட்டுள்ளன. கோடை விழா மலர்க் கண்காட்சியின்போது, மலர்ச் சிற்பங்கள் குறித்து திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×