என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500- க்கு விற்பனை
    X

    சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500- க்கு விற்பனை

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
    • இங்கிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.3000 வரை விற்கப்பட்டு வந்தது.

    இந்த மாதத்தில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.1200 முதல் ரூ.800 வரை என விற்கப்பட்டு வந்தது இந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பூக்கள் வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அனைத்து வகையான பூக்களின் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது. பூக்கள் விலை கணிசமாக குறைந்து வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (28.2.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : குண்டு மல்லிகை - ரூ.500, முல்லை - ரூ.800, ஜாதி மல்லி - ரூ.500, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.140, மலை காக்கட்டான் - ரூ.80, சி.நந்தியா வட்டம் - ரூ.100, சம்பங்கி - ரூ.30, சாதா சம்பங்கி - ரூ.50, அரளி - ரூ.80, வெள்ளை அரளி - ரூ.80, மஞ்சள் அரளி - ரூ.80, செவ்வரளி - ரூ.140, ஐ.செவ்வரளி - ரூ.90, நந்தியா வட்டம் - ரூ.30, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×