என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்
- ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம் இணைத்து செய்திருந்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்க்கு சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி தலைமை தாங்கினார்.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழநன், பி.டி.ஓ–கள் அன்புராஜ், வெங்கடேசன், தாசில்தார் விஸ்வநாதன், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம் இணைத்து செய்திருந்தனர். முகாமில் 437 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் முழுவதுமான மூளை வளர்ச்சி குன்றிய 25 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 3000 பெறுவதற்கான ஆணை, 4 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 12 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கண், காது, எலும்பு மற்றும் மனநலம் ஆகியவற்றை பரிசோதித்து அதில் பாதிப்பு கண்டறிந்த 139 பேருக்கு புதிய மாற்றுத்திற னாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 127 பேருக்கு தனித்துவமான அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது. 13 பேருக்கு உதவி உபகரணம் மற்றும் 20 பேருக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் விண்ணப்பித்து தரப்பட்டது.






