என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரேக்ளா ரேஸ் போட்டியை வீடியோ எடுத்தவர்கள் உள்பட 3 பேர் காயம்
  X

  ரேக்ளா ரேஸ் போட்டியை வீடியோ எடுத்தவர்கள் உள்பட 3 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
  • தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.

  தாரமங்கலம்:

  தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், சேவகனுர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் சரத்குமார் (வயது 24). இவர் அழகுசமுத்திரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

  சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.

  அந்த குதிரை வண்டியை கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன்(25), சதீஷ்(23) ஆகிய 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தபடி சமூக வலைத ளங்களில் பதிவிடுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்தனர்.அப்போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீதுமோதியது. இதில் சரத்குமார், லோகநாதன், சதீஷ், ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இந்த விபத்து குறித்து சரத்குமாரின் தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் அந்த பகுதியில் குதிரை வண்டி பந்தயம் நடத்த தடை விதித்துள்ளனர்.

  Next Story
  ×