என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்- மோட்டார் சைக்கிள் மோதிகணவன், மனைவி படுகாயம்
- நெய்க்காரப்பட்டியிலிருந்து, அன்னதானப்பட்டி நோக்கி தங்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- அப்போது பட்டர் பிளை மேம்பாலம் ஏறும் போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
அன்னதானப்பட்டி:
சேலம் கொண்ட லாம்பட்டி புத்தூர், பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 39). இவரது மனைவி புஷ்பா (28) . இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கொண்டலாம்பட்டி அடுத்த நெய்க்காரப்பட்டியிலிருந்து, அன்னதானப்பட்டி நோக்கி தங்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பட்டர் பிளை மேம்பாலம் ஏறும் போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் வந்தவர் யார் ?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை. கார் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






