என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநங்கையாக மாற முடியாத ஏக்கத்தில் சிறுவன் தற்கொலை
- வெங்கடேஷ் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல், அடிக்கடி வெளியில் திருநங்கைகளுடன் சுற்றித்திரிந்துள்ளான்.
- இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் கடந்த 22-ந் தேதி விஷத்தை குடித்து விட்டான்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் வெங்கடேஷ் (17). அங்குள்ள தனியார் மீன் பண்ணையில் வேலை செய்து வந்தான்.
வெங்கடேஷ் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல், அடிக்கடி வெளியில் திருநங்கைகளுடன் சுற்றித்திரிந்துள்ளான்.
மேலும், தானும் திருநங்கையாக மாற வேண்டும் என கூறி வந்தான். இதற்கு அவனது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவனை சந்திக்க வந்த திருநங்கைகளுடன் பேச விடாமல் தடுத்ததாகவும் கூறப் படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் கடந்த 22-ந் தேதி விஷத்தை குடித்து விட்டான்.
உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினான். இந்நிலையில், இரவு மீன் பண்ணைக்கு சென்ற வெங்கடேஷ் திருநங்கையாக மாற முடியவில்லை என வருத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்தபுகாரின் பேரில், பூலாம்பட்டி போலீசார் உடலை மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






