என் மலர்tooltip icon

    சேலம்

    • நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
    • இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கி யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் கொத்த னார் வேலை செய்து வந்தார்.

    கொைல

    இவர் நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது பற்றி சக்திவேலின் தாய் அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாலிபர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    திடுக்கிடும் தகவல்

    இதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கொலையுண்ட சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் துக்கியாம்பா ளையம் வடக்குக்காடு பகுதியில் சென்றபோது, சக்திவேல் காதலித்து வந்த சிறுமியின் அண்ணனான சதீஷ்குமார் (22) மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன், சேலம் புத்தூர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேலை திடீரென கத்தியால் கழுத்தில் வெட்டி சரமாரி யாக தாக்கியுள்ளனர். இதில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்பது தெரியவந்தது.

    3 பேர் கைது

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், இவரது உறவினர் 17 வயது சிறுவன் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

    வாக்குமூலம்

    கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கையை, சக்திவேல் பின்தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதல் வலையில் வீழ்த்தினார். எனது தங்கைக்கு 18 வயது நிரம்பவில்லை. இதனால் நான் முதலில் எனது தங்கையை கண்டித்தேன். மேலும் வீட்டில் சத்தம் போடுவதை கண்டு அவர், சக்திவேலிடம் பேசாமல் இருந்து வந்தார்.

    ஆனால், எனது தங்கையை பார்ப்பதற்காக வீட்டின் அருகே சக்திவேல் சுற்றி சுற்றி வந்தார். அப்போது எனது தங்கை வீட்டில் நடந்தவற்றை சக்திவேலிடம் தெரி வித்துள்ளார். இதனால் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இதனால் நான், சக்தி ேவலை சத்தம் போட்டேன். எனது தங்கையிடம் பேசாதே, அவரை பின்தொடராதே, அவள் சிறுமி, என கண்டித்தேன். ஆனால், சக்திவேல் கேட்காமல், எனது தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் இது பற்றி எனது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தேன்.

    இதையடுத்து நான், எனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து, சம்பவத்தன்று சக்திவேலை வழிமறித்து தீர்த்துக்கட்டிேனன். இதையடுத்து நாங்கள் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க தலைமறைவாக சுற்றி திரிந்தோம். ஆனால், போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு சதீஷ்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    ெஜயிலில் அடைப்பு

    இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன் ஆகியோரை வாழப்பாடி கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் சதீஷ்குமார், ஆத்தூர் கிளை சிறையிலும், 17 வயது சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவான மைக்கேலை வாழப்பாடி போலீசார் தேடி வந்தனர். இன்று காலையில் அவர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து மைக்கேலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சினிமாவை மிஞ்சும் சம்பவமாக, சிறு வயது காதல், கொலை செய்யும் அளவிற்கு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
    • மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஆனை மடுவு, கரிய கோவில், காடையாம்பட்டி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: ஆனைமடுவு-19, கரிய கோவில் -18, காடையாம்பட்டி -17, ஏற்காடு -8.4, பெத்தநாயக்கன் பாளையம்-5.5, தம்மம்பட்டி-5, ஓமலூர்-4.6, சேலம் 1.2 என மாவட்டம் முழுவதும் 78.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். 

    • மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.

    திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.
    • அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அந்த பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொளத்தூரை சேர்ந்த அங்குபிள்ளை (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
    • ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு தாசில்தார் தாமோதரன், தனி தாசில்தார் தீபசித்தரா, துணை தாசில்தார் ஹரிபிர சாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அந்த மனுக்களில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ் உட்பட்ட மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றிதழ்களை பயனாளர்களுக்கு நேற்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா வழங்கினார்.

    மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா கூறினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.81 அடியாக குறைந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    நேற்று வினாடிக்கு 1,225 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 924 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று 103.87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 103.81 அடியாக குறைந்தது.

    • அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது.
    • இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது. இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.

    இதனிடையே தமிழ் மொழித் தேர்வு கடினமாக இருந்ததாகவும், எனவே தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தேர்வு வாரி யத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20-ல் இருந்து 15- ஆக குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    • கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • தார்சு சுவரில் இருந்து காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் போலீசார் திடுக்கிட்டனர்.

    சேலம்:

    கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு நேற்று போலீசார் பணியில் இருந்தனர். அப்போது தார்சு சுவரில் இருந்து காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் போலீசார் திடுக்கிட்டனர். விழுந்த கற்கள் போலீசார் மீது விழாததினால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் கூறும் போது, இந்த போலீஸ் நிலையத்தில் ஆங்காங்கே விரிசல்கள் இருந்து வந்தது. தற்போது காரை பெயர்ந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார் அல்லது பொதுமக்கள் மேல் விழுந்து இருந்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்போம். எனவே காரை பெயர்ந்து விழுந்த இடத்தை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவேண்டும்' என்றார்கள்.

    • விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவி ரப்படுத்தப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் கள்ளச்சா ராயம் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) நர்மதாதேவி, போலீஸ் துணை கமிசனர்கள் கவுதம் கோயல், லாவண்யா, குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர்கள் மாறன், தணிகாச்சலம், சரண்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாநகரப் பகுதிக்கு 94981 62794 என்ற எண்ணிலும், ஊரகப் பகுதிக்கு 94899 17188 என்ற அலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

    கள்ளச்சாராயம் காய்ச்சுப வர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடுவர்களைச் சீர்திருத்த சேலம் அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு மையங்கள் உள்ளன. இதன் மூலம் அவர்களைச் சீர்திருத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இளைஞர்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கூறுகையில், சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் கடந்த சில நாட்களாக சேலம் மாநகரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திறந்த வெளி இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 235 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் சேலம் மாநகரப் பகுதியில் மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை அனுமதி பெற்று இருப்பு வைத்திருக்கும் நிறுவனங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராய நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாத நிலையை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையால் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • மான் தோலை வைத்து சாமி ஆடுவதாக ஊர் மக்கள் நேற்று டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
    • டேனீஸ்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே சாமி குறி சொன்ன 4 நபர்களையும் பிடித்து டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த முத்துராமன், சரவணன் மற்றும் பண்ணப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த சரவணன், தேமுட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த கணேஷ் ஆனந்தசாமி ஆகியோர் மான் தோலை வைத்து சாமி ஆடுவதாக ஊர் மக்கள் நேற்று டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், டேனீஸ்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே சாமி குறி சொன்ன 4 நபர்களையும் பிடித்து டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதுகுறித்து பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுக்கு வேட்டையாட தெரியாது, ரொம்ப நாட்களுக்கு முன்பு இமயமலையில் இருந்து விலை கொடுத்து மான் தோலை வாங்கி வந்து குறி சொல்லி வருகிறோம் என்றனர்.

    இருந்தாலும் வனத்துறை அதிகாரிகள், மான் தோலை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாமா? வேண்டாமா? என அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும்.

    சேலம்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்கும்.

    2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதிகள் உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த ஏப்ரல் மாதம் 2022 அன்று (01.04.2022) 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பப்பட வேண்டும்).

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இந்த விருதிற்கு விண்ணப்பிக்க www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம். 31.5.2023 மாலை 4 மணி ஆகும் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

    • பரிவார தெய்வங்கள் கோவில் மஹா தெவ பூஜை திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
    • இதையொட்டி பொங்கல் பானை செய்ய மண்ணுடையாரிடம் மண் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ஸ்ரீசின்னண்ணன், ஸ்ரீபெரியண்ணன், ஸ்ரீதங்கா, ஸ்ரீவீரசாமுகன் பரிவார தெய்வங்கள் கோவில் மஹா தெவ பூஜை திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி பொங்கல் பானை செய்ய மண்ணுடை யாரிடம் மண் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி சாமி இறங்கும் நிகழ்வு, 26-ந்தேதி மாரியம்மன் கோவில் திடலில் சக்தி அழைக்கும் நிகழ்வு, பின்பு சாமி அண்ணமார் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து மண்ணுடையார் வீட்டில் இருந்து பொங்கல் பானை எடுத்து வரும் நிகழ்வும், சாமி பதிக்கு எடுத்து செல்லுதலும் நடக்கிறது.

    பின்பு மண்ணுடையார் வீட்டிலிருந்து வீரசாமுகன் மற்றும் வேட்டைக்காரன் சாமிகளை பதிக்கு எடுத்து வரும் நிகழ்வு நடைபெறும். 26-ந்தேதி காலை 6 மணிக்கு மகா தெவம், 27-ந்தேதி மாலை வீரசாமுகனுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மல்லூர் டாக்டர் அம்பேத்கார் நகர் அண்ணமார் சாமி பங்காளிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    ×