என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.81 அடியாக சரிவு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.81 அடியாக குறைந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 1,225 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 924 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று 103.87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 103.81 அடியாக குறைந்தது.
Next Story






