search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் சேலத்தில் போலீசார், அதிகாரிகளுடன்கலெக்டர் கார்மேகம் ஆலோசனை
    X

    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் சேலத்தில் போலீசார், அதிகாரிகளுடன்கலெக்டர் கார்மேகம் ஆலோசனை

    • விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவி ரப்படுத்தப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் கள்ளச்சா ராயம் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) நர்மதாதேவி, போலீஸ் துணை கமிசனர்கள் கவுதம் கோயல், லாவண்யா, குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர்கள் மாறன், தணிகாச்சலம், சரண்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாநகரப் பகுதிக்கு 94981 62794 என்ற எண்ணிலும், ஊரகப் பகுதிக்கு 94899 17188 என்ற அலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

    கள்ளச்சாராயம் காய்ச்சுப வர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடுவர்களைச் சீர்திருத்த சேலம் அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு மையங்கள் உள்ளன. இதன் மூலம் அவர்களைச் சீர்திருத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இளைஞர்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கூறுகையில், சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் கடந்த சில நாட்களாக சேலம் மாநகரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திறந்த வெளி இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 235 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் சேலம் மாநகரப் பகுதியில் மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை அனுமதி பெற்று இருப்பு வைத்திருக்கும் நிறுவனங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராய நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாத நிலையை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையால் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×