என் மலர்
சேலம்
- ஆவின் பாலகம் முன்பாக, கடந்த 10-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
முதியவர் பிணம்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஆவின் பாலகம் முன்பாக, கடந்த 10-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையங்கு முன்பு உள்ள ஆலமரக்காடு டாஸ்மாக் அருகில் நேற்று மாலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளப்பட்டி போலீசார், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசராணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகள் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.
- மாவட்டத்தில் 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகள் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.
தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு )ராஜராஜன் தலைமையில் சேலம் வருவாய் அலுவலர் மாறன், தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 84 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் கூறியதாவது:-மாவட்டத்தில் 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் குறைபாடுகள் இருப்பின் அதை திருப்பி அனுப்பி சரி செய்து வரும்படி அறிவுறுத்தபடும்.
பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த கவனமுடன் பேருந்துகளை இயக்க வேண்டும். குழந்தைகளை பேருந்தில் ஏற்றும் போது அவர்கள் முழுமையாக ஏறி இருக்கையில் அமர்ந்து விட்டனரா என்பதை கவனித்தும், அதேபோல் பேருந்தில் இருந்து குழந்தைகள் இறங்கிய பிறகு பெற்றோரிடம் சேர்ந்து விட்டனரா என்பதை உறுதி செய்த பின்னர் பேருந்தை இயக்க வேண்டும்.
பேருந்தில் தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் 6 மாத காலத்திற்கு அவர்களது லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சேலம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளிகளில் பயிலும் மாணவ-மாண விகள் விளையாட்டுத் துறை யில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாண வர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வரு கின்றன. மேலும் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்ப லூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, திருச்சி, திரு நெல்வேலி ஆகிய இடங்க ளில் மாணவிக ளுக்கான விளை யாட்டு விடுதி செயல்பட்டு வருகின்றன.
மேலும் சென்னை, ஈரோட்டில் மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியும், சத்துவாச்சேரி வேலூரில் மாணவர்க ளூக்கான முதன்மை நிலை விளையாட்டு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24-ந்தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் விளையாட்ட ரங்கங்களில் நடைபெற உள்ளது
மாணவர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் போன்ற விளையாட்டுக்களில் தேர்வு நடைபெறும். மாணவி களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, டென்னிஸ், ஜீடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேசைப்பந்து போன்ற விளையாட்டுக்க ளில் தேர்வு நடைபெறும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய கடைசி நாள் வருகிற 23-ந் தேதியாகும். விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
- ஏற்காட்டில் 46-வது கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
- வரும் 28-ம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
சேலம்:
ஏற்காட்டில் 46-வது கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை நடைபெறும் விழாவை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
ஏற்காட்டில் ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 46-வது கோடை விழா மற்றும் கண்காட்சி நாளை (21-ம் தேதி) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
கோடை விழாவை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கா.ரா மச்சந்திரன், மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்க லைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னே ஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட வுள்ளது.
மேலும் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளன.
மலர்க் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளை யும் பல்வேறு பழங்களை கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி களும் அமைக்கப்பட வுள்ளன. இதற்கான பணி களில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்காட்டில் சுற்றுலா இடங்களை சுற்றுப்பார்க்கும் வகையில் சேர்வராயன் கோவில், லேடிஸ் சீட், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரும் வகையில் 4 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கோடை விழாவை யொட்டி ஏற்காடு மலைப் பாதையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்காடு செல்லும்போது கோரிமேடு, ஏற்காடு மலை அடிவாரம் வழியாக கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
ஏற்காடு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு குப்பனூர் வழியாக வாகனங்கள் இறங்கி செல்ல வேண்டும். அதே நேரம், பஸ்கள் அனைத்தும் குப்பனூர் சாலை வழியாக மட்டும் ஏற்காடு சென்று விட்டு அதே வழித்தடத்தில் இறங்கும் வகையில் போக்கு வரத்து மாற்றப்பட்டுள்ள தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்த போதிய அளவில் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்ப டுத்தும் பணியில் ஈடுப டுத்தப்பட உள்ளனர். சுற்று லாப் பயணிகளுக்கு தேவை யான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
- இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம். சேவகனுர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன். சரண்யா தம்பதியரின் மகன் திருபன் (15) என்பவர் கே ஆர் தோப்பூர் அரசு மேல்நிலைபள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது பெற்றோர் வெளி யில் சென்று விட்டதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தாய் உள்ளே சென்ற போது மாணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்ச லிட்டுள்ளார் .இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட 44 கிராமங்களின் வருவாய் கணக்குகளின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கடந்த 4 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மொத்தம் 1,701 மனுக்களை வழங்கினர்.
சங்ககிரி:
சேலம் மாவட்ட கலெக்டரும், சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலருமான கார்மேகம் கடந்த 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை, சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட 44 கிராமங்களின் வருவாய் கணக்குகளின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று, கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹாரம் தாழையூர், காளிகவுண்டம் பாளையம், கன்னந்தேரி, அபுதூர், ஏகாபுரம், இடங்கணசாலை, தப்பகுட்டை, நடுவனேரி, எர்ணாபுரம், கனககிரி, கூடலூர், கண்டர் குலமா ணிக்கம் உள்ளிட்ட கிராமங்க ளின் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்தார். அவரிடம் 579 கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மொத்தம் 1,701 மனுக்களை வழங்கினர். இதனையடுத்து நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து இலவச வீட்டு மனை பட்டா 58, பட்டா மாறுதல் உத்தரவு 27, சர்வே எண் உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவு 22, முதியோர் உதவித் தொகை 141, புதிய குடும்ப அட்டை 53 பேருக்கு என மொத்தம் 301 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இதில் சங்ககிரி வட்டாட்சி யர் அறிவுடைநம்பி வர வேற்றார். வருவாய் கோட்டாட்சியர் தணிகாச லம், நில அளவை உதவி இயக்குனர் ராஜசேகர், மாவட்ட மேலாளர் நீதியல் சீனிவாசன், சமூக பாது காப்பு நலத்துறை ராஜேந்தி ரன், மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனி வட்டாட்சியர் லெனின் நன்றி கூறினார்.
- பாலமலை கிராம ஊராட்சியில் ரூ.13.87 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.
- 20 விவசாயிகளுக்கு 20 ஏக்கரில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து தரப்படும்.
மேட்டூர்:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலமலை கிராம ஊராட்சியில் ரூ.13.87 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.
இந்த திறந்த வெளி கிணறு பணி முடிக்கப்பட்ட பின் 20 விவசாயிகளுக்கு 20 ஏக்கரில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து தரப்படும். இதனால் 20 ஏக்கர் தரிசு நில தொகுப்பு விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த ஆய்வின்போது தரிசு நில தொகுப்பு விவசாயிகளிடம் பயிர் சாகுபடி மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து இணை இயக்குனர் சிங்காரம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதே போல், நவபட்டி மற்றும் பண்ணவாடி கிராமத்தை சேர்ந்த தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தொழில்நுட்ப ஆலோசனை கள் வழங்கினார்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
- நீர்வரத்தை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 1,225 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 924 கனஅடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 762 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.74 அடியாக குறைந்தது.
- கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
மேட்டூர்:
கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். மேலும் அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால், மாதேஸ்வர மலை கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் மேட்டூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதையடுத்து கர்நாடக மற்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் மேட்டூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது.
- தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது.
சேலம்:
பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது. தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 25-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைத்து பக்கதர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
- சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதையடுத்து வெள்ளி தொழிலாளர்கள் கோரிக்கையின் அடிப்படை யில் அரியாகவுண்டம்பட்டி யில் வெள்ளி கொலுசு பன்மாடி உற்பத்தி மையக் கட்டிடம் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வெள்ளி கொலுசு உற்பத்தி மைய கட்டிட பணி களை விரைந்து முடித்துத் பயன்பாட்டுக்கு வழங்கு மாறு சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத் தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் முனியப்பன், துணை செயலாளர் பாபு ஆகியோர் தமிழ்நாடு சிட்கோ சென்னை கிண்டி யில் உள்ள மேலாண்மை இயக்குனர் மதுமதியிடம் மனு வழங்கினர். அப்போது அவர் விரைந்து கட்ட நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்தார்.
- ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.
- இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் முன் நின்று வணங்கி, மூலவர் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மாலை அணிந்து, சாமியின் மேல் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.






