என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாளை கோலாகல தொடக்கம் ஏற்காட்டில் கோடைவிழா, மலர் கண்காட்சி
- ஏற்காட்டில் 46-வது கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
- வரும் 28-ம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
சேலம்:
ஏற்காட்டில் 46-வது கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை நடைபெறும் விழாவை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
ஏற்காட்டில் ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 46-வது கோடை விழா மற்றும் கண்காட்சி நாளை (21-ம் தேதி) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை 8 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
கோடை விழாவை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கா.ரா மச்சந்திரன், மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்க லைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னே ஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட வுள்ளது.
மேலும் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளன.
மலர்க் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளை யும் பல்வேறு பழங்களை கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி களும் அமைக்கப்பட வுள்ளன. இதற்கான பணி களில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்காட்டில் சுற்றுலா இடங்களை சுற்றுப்பார்க்கும் வகையில் சேர்வராயன் கோவில், லேடிஸ் சீட், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரும் வகையில் 4 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கோடை விழாவை யொட்டி ஏற்காடு மலைப் பாதையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்காடு செல்லும்போது கோரிமேடு, ஏற்காடு மலை அடிவாரம் வழியாக கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
ஏற்காடு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு குப்பனூர் வழியாக வாகனங்கள் இறங்கி செல்ல வேண்டும். அதே நேரம், பஸ்கள் அனைத்தும் குப்பனூர் சாலை வழியாக மட்டும் ஏற்காடு சென்று விட்டு அதே வழித்தடத்தில் இறங்கும் வகையில் போக்கு வரத்து மாற்றப்பட்டுள்ள தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்த போதிய அளவில் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்ப டுத்தும் பணியில் ஈடுப டுத்தப்பட உள்ளனர். சுற்று லாப் பயணிகளுக்கு தேவை யான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






