என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.
- மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர்.
ஏற்காடு:
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.
இந்த பேரணி ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி டவுன் மார்க்கெட், பஸ் நிலையம் வழியாகச் சென்று ஒண்டிக்கடை ரவுண்டானா அருகில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் நிறை வடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரணி குறித்தும் பேரணி எதற்காக நடைபெற்றது என்று குறித்தும் விளக்கி பேசினர்.
மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர். இந்த பேரணியில் ஏற்காட்டில் உள்ள பள்ளி குழந்தைகள், கிறிஸ்தவ சபையை சேர்ந்த தலை வர்கள், இஸ்லாமிய தலை வர்கள், இந்து மத முக்கி யஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கொண்டனர்.
- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதலே வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நாளை (22 -ந் தேதி) சேலம், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.
- அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.
சேலம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தீவட்டிப்பட்டி சமத்துவ புரம் அருகே சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி பாப்பாத்தி (62) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண்.
- அதே பகுதியை சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோர் பாரப்பட்டி காலனி பகுதியில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து அருண் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோரை கைது செய்தனர்.
- காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம்.
- இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.
மேட்டூர் அணை பூங்கா
அவர்கள் இங்குள்ள காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த பூங்காவில் பொதுபணித் துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யபடுகிறது.
இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.38.495 வசூல் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் இருந்த ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
- வடிவேல் (45). தறி தொழிலாளி, இவரது மனைவி சாந்திதேவி (41), இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- கடந்த சில மாதங்களாக வடிவேல் தறி ஓட்டாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டை யாம்பட்டி மெயின்ரோடு நவாப்மேடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45). தறி தொழிலாளி, இவரது மனைவி சாந்திதேவி (41), இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வடிவேல் தறி ஓட்டாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 52 ஆயிரம் ரூபாய்
அந்த பகுதியை சேர்ந்த வரிடம் கடன் வாங்கி விட்டு கட்டவில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சாந்திதேவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகன்கள் மற்றும் மகள் கதறி துடித்தனர்.
இது குறித்து ஆட்டை யாம்பட்டி போலீசில் வடி வேல் கொடுத்த புகாரின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர்.தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கா க சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி ராணி அண்ணா நகர் சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்சுரேஷ் (21), இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்த நிலையில் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த்சுரேஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சமீப காலமாக ஆனந்த்சுரேசிடம் பேசாமால் ஒதுங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்ற ஆனந்த்சுரேஷ் இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.
இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 17ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதேநேரம் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கடந்த 17-ந் தேதி முதல் வரத்தொடங்கியது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று வினாடிக்கு 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று காலை 54.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 55.14 அடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 105.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 12ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3868 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 17ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 13ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் மீதமுள்ள தண்ணீரும் படிப்படியாக மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 21.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மரவனேரி பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் மதன்கிருஷ்ணன். இவரது மகன் சாரதி (16). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு படிப்பதால் பள்ளியில் அதிக அளவில் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளனர். இதனை அவர் சரியாக எழுதாததால் ஆசியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சாரதி பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே அவரது பெற்றோரும் 10-ம் வகுப்பு படித்து முடியும் வரை சற்று கஷ்டமாகதான் இருக்கும், இதனால் பள்ளிக்கு செல்லுமாறு கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த தனது சகோதரனிடம் நாளை பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று சாரதி கூறி உள்ளார்.
பின்னர் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். சற்று நேரத்தில் வீட்டின் கதவை பெற்றோர் தட்டிய நிலையில் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்ள மின் விசிறிக்காக அமைக்கப்பட்ட கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும்.
- மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல்.
ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு அளித்த வரப்பிரசாதம்: 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணைகர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முடிய பெய்யும் பருவமழையினால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது.
இதனால் விவசாய பயிர்கள் நாசம் அடைவதை தடுப்பதற்காக ஆங்கிலேயர்களால் 1925-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போதைய தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினீயர் கர்னல் டபிள்யூ.எல்.எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினீயர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை என்ஜினீயர் முல்லிங் கஸ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக அணை கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு தொடங்கப்பட்ட அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி நிறைவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும்.
இதைத்தொடர்ந்து 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி, அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார். அவர் நினைவாகவே மேட்டூர் அணைக்கு ஸ்டாலின் நீர்த்தேக்கம் என்ற பெயரிடப்பட்டது. இது காலப்போக்கில் மேட்டூர் அணை என்று மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு அளித்த வரப்பிரசாதமாக இந்த அணை திகழ்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குகிறது.
மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி).
அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என 3 நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணையின் இடது கரைப்பகுதியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டன.
மதகுகளை இயக்க 16 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்மோட்டார்கள் கைகளாலும் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4 லட்சத்து 410 கனஅடி நீரை வெளியேற்றலாம். இது தவிர அணையின் வலது கரைப்பகுதியில் மண் கரை கொண்ட வெள்ளப்போக்கி 814 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் அணைக்கு மிக அதிகளவில் வெள்ளம் வந்தால் அணைக்கு எவ்வித சேதமும் இன்றி அதிகளவு வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் வினாடிக்கு 50 ஆயிரத்து 400 கனஅடி வரை தண்ணீரை வெளியேற்றலாம். அணையின் மேல் மட்ட மதகு, கீழ்மட்ட மதகு மற்றும் மின் நிலை மதகு வழியாக வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும்.
மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை காலங்களில் வினாடிக்கு 5 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர் அணை கட்டுமானம் வடிவமைக்கப்பட்டபோது வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
பருவமழை காலத்தில் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்து இருகரைகளையும் தொட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் பணியை மேட்டூர் அணை சிறப்பாக செய்து வருகிறது. அணை கட்டப்பட்ட பிறகு 1965-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கனஅடி தண்ணீர் வந்தது. 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 கனஅடியும், கடைசியாக கடந்த ஆண்டு(2022) அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கனஅடி வரையும் தண்ணீர் வந்தது
ஆண்டுதோறும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பும் நேரங்களில் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செய்வதற்காக மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நேரங்களில் இந்த உபரிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வினாடிக்கு பல லட்சம் கனஅடி வீதம் வந்த காட்டாற்று வெள்ளத்தை தனது கட்டுக்குள் வைத்து தமிழக மக்களுக்கு பயனளித்த மேட்டூர் அணை தனது 90-வது ஆண்டில் காவிரி நீருக்காக கண்ணீர் வடிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
- தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது.
- இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவ லிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம்:
நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றிட வேண்டி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவ
லிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி அமைப்பாளர்கள் அருண் பிரசன்னா, வீரபாண்டி டாக்டர் பிரபு, மணிகண்டன், மாணவரணி அமைப்பாளர்கள் கோகுல் காளிதாஸ், கண்ணன், சீனிவாசன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் அருள், கே.கே.கோகுல், மாவட்ட துணை செயலாளர்கள்பாரப்பட்டி சுரேஷ்குமார், குமரவேல், திருநாவுக்கரசு, சுந்தரம், சம்பத், மண்டல தலைவர்கள் அசோகன், கலையமுதன், உமாராணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கேபிள்
சரவணன், துணை அமைப்பா ளர்கள் பிரசன்னரமணன், சோளம்பள்ளம் கார்த்தி செழியன், லோகேஷ், இப்ராகிம், மனோஜ், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. டி.மணி, தாமரைக்கண்ணன், சங்கர் என்ற சாமிநாதன்.
பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, நாசர் கான், குபேந்திரன், பூபதி, கோபால், சந்திரமோகன், மாநகர செயலாளர் ரகுபதி, துணைசெயலாளர்கள் கணேசன், தினகரன், பகுதிச் செயலாளர் தமிழரசன் சரவணன், ஜெயக்குமார், சாந்தமூர்த்தி தனசேகரன், ஜெகதீஷ், முருகன், மணல்மேடு மோகன், ராஜா ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், விஜயகுமார், ரெயின்போ நடராஜன், சக்கரவர்த்தி செழியன், உமாசங்கர், அறி
வழகன், ரமேஷ் செல்வ குமரன், சீனிவாச பெருமாள், வினு சக்கரவர்த்தி, சின்னு, பரமசிவம்,நல்லதம்பி ராஜேஷ், நகர செயலாளர் பாஷா, இலக்கிய அணி புலவர் முத்து கலைமாமணி, நிலவாரப்பட்டி தங்க ராஜ், ஏ.ஏ.ஆறுமுகம், நிர்மலா உள்பட ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சந்திரசேகர் (55) இவர் நேற்று இரும்பாலை ரோடு காவடி பழனியாண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (55) இவர் நேற்று இரும்பாலை ரோடு காவடி பழனியாண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த சந்திரசேகரன் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரசேகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது மோதி சென்ற மோட்டார் சைக்கிள் எது என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






