என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியேட்டரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
- ராஜாராம் சம்பவத்தன்று மொபட்டில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார்.
- வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் சின்ன திருப்பதி கந்தசாமி கோவில் அருகில் வசிப்பவர் ராஜாராம் (36). இவர் சம்பவத்தன்று மொபட்டில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு சென்றனர்.
சினிமா பார்த்துவிட்டு திரும்பியபோது மொபட்டின் சீட்டின் அடியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்து. இது குறித்து ராஜாராம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மொபட்டில் இருந்த பணத்தை திருடியது அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (21) என்பது தெரியவந்தது.இதையடுத்து வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






