என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் லைன்மேட்டில் கழிவு செய்யப்பட்ட போலீஸ் வாகனங்கள் ஏலம்
- அன்னதானப்பட்டி லைன்மேடு ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்திம்
- வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி முழுவதையும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
அன்னதானப்பட்டி
சேலம் மாநகர காவல் துறையில், பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர காவல் வாகனங்கள் வரும் (31- ந் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அன்னதானப்பட்டி லைன்மேடு ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.
இந்த வாகனங்களை 29- ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் முன் பணமாக ரூ.5 ஆயிரம் , 30- ந் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் செலுத்தலாம்.முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி முழுவதையும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, காவல் கூடுதல் துணை ஆணையாளர், ஆயுதப்படை, சேலம் மாநகரம், அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.






