என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்
    X

    சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாமில் இன்ஸ்பெக்டர் தேவி பேசிய காட்சி.

    சங்ககிரியில் சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்

    • சங்ககிரி அருகே உள்ள சின்னாக்கவுண்டனூர் ஊராட்சி ஜேஜே நகரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஆதிதிராவிட நலத்துறை தனி வருவாய் ஆய்வாளர் மலர்விழி, தனி சார் ஆய்வாளர் பிரேமலதா உட்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    சங்ககிரி அருகே உள்ள சின்னாக்கவுண்டனூர் ஊராட்சி ஜேஜே நகரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இவ்விழாவில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமை வகித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஆதிதிராவிட நலத்துறை தனி வருவாய் ஆய்வாளர் மலர்விழி, தனி சார் ஆய்வாளர் பிரேமலதா உட்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×