என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் கல்லூரி ஊழியர் பலி
- தனியார் கல்லூரியில் சிஸ்டம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
- வந்த லாரி எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாசிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாக்ரடீஸ். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). இவர் அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சிஸ்டம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கந்தாஸ்ரமத்திலிருந்து அம்மாபேட்டை டன்லப் ஜங்ஷனில் திரும்பியபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமார் உடலை
மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






