என் மலர்
ராணிப்பேட்டை
- ராணிப்பேட்டையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 19-ந் தேதி கலெக்டர் வளர்மதி தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம். கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து. பால்வளம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகயும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 19-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசு. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 19-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
- விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை:
வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31). இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு செந்தமிழ் செல்வனுடன் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர். இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்
- போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் திலீப் (வயது 19). இவர் திருவலங்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி, முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் திலீப் வழக்கம் போல் நேற்று கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவலங் காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திலீப் உடலை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் திலீப்பின் உறவினர்கள் குவிந்தனர்.
சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதானல் சமாதானம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலைந்து சென்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாராய மற்றும் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்பட்டடது.
இதில் 10 கஞ்சா வழக்குகளும், 50 சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா, 55 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை பற்றி மாவட்ட, மாநில காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
மேலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
- சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த பழைய அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55) தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மதியம் வீட்டிற்கு செல்வதற்காக அக்ராவரம் -பெல் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
- பீரோவின் பக்கத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மர்ம கும்பலிடம் இருந்து தப்பியுள்ளது.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி வனிதா. மகள் யுத்திகா வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் நேற்று இரவு இவர்கள் அனைவரும் மாடியில் தூங்கினர்.
இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்து 70 பவுன் நகை, 750 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் சத்தம் கேட்கவே ஜெகன்நாதன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த நகை, வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீரோவின் பக்கத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மர்ம கும்பலிடம் இருந்து தப்பியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்திள்ளது.
- 9-ந் தேதி கொடியேற்றம்
- பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மகாபாரத பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினசரி மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் நடைபெற்றன. மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து,
பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாலை தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
- 4 கிலோ பறிமுதல்
- திரிபுரா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர் .
விசாரணையில் அந்த வாலிபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரூசன் அலி (27)என்பதும், இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரிடம் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா பொட்ட லங்களை திரிபுரா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து கலால் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூஷன்அலியை கைது செய்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை,
வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50) கூலித்தொழிலாளி.
இவர் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்கை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- நோயாளிகளை அலட்சியப்படுத்துவதாக புகார்
- நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. வினர் கோஷம் போட்டனர்
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க.மாவட்ட செயலாளர் ப. சரவணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் எம்.கே.முரளி , மாவட்ட துணை செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி, வக்கீல்.ஜானகிராமன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோ, மாவட்ட மாணவர் அணி செயலாளர் கவியரசு, மாவட்ட சமூக ஊடகப்பேரவை செயலாளர் வினாயகம், மாவட்ட அன்புமணி படை செயலாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் கிரிகுமரன் உள்பட மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு ,அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அலட்சியப்ப டுத்துவதையும் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷம் போட்டனர்.
முடிவில் வாலாஜா நகர செயலாளர் பூக்கடை.ஜானகிராமன் நன்றி கூறினார்.
- ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அருகே கார் வந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக , டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா (வயது 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17).
இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம், வஜ்ர கருவு பகுதியில் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இன்று காலை சென்னை நோக்கி காரில் வந்தனர். அதில் 6 பேர் இருந்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த டிரைவர் விஜய் (32) என்பவர் காரை ஓட்டி வந்தார்.
இன்று காலை ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அருகே கார் வந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக , டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த சிறுமிகள் தபசு பாத்திமா, சுமையா பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மற்ற 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.






