என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Hospital Administration"

    • நோயாளிகளை அலட்சியப்படுத்துவதாக புகார்
    • நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. வினர் கோஷம் போட்டனர்

    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க.மாவட்ட செயலாளர் ப. சரவணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் எம்.கே.முரளி , மாவட்ட துணை செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி, வக்கீல்.ஜானகிராமன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோ, மாவட்ட மாணவர் அணி செயலாளர் கவியரசு, மாவட்ட சமூக ஊடகப்பேரவை செயலாளர் வினாயகம், மாவட்ட அன்புமணி படை செயலாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் கிரிகுமரன் உள்பட மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு ,அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அலட்சியப்ப டுத்துவதையும் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷம் போட்டனர்.

    முடிவில் வாலாஜா நகர செயலாளர் பூக்கடை.ஜானகிராமன் நன்றி கூறினார்.

    ×