search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspect in death"

    • பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், வேனுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி ஜோதிமணி (30). தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சீனிவாசன் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு செல்ல சீனிவாசன் முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோதிமணி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்
    • போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் திலீப் (வயது 19). இவர் திருவலங்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி, முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் திலீப் வழக்கம் போல் நேற்று கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவலங் காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திலீப் உடலை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் திலீப்பின் உறவினர்கள் குவிந்தனர்.

    சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதானல் சமாதானம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலைந்து சென்றனர்.

    ×