என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் ரெயிலில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
- பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
தருமபுரி மாவட்டம், வேனுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி ஜோதிமணி (30). தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சீனிவாசன் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு செல்ல சீனிவாசன் முடிவு செய்தார்.
அதன்படி நேற்று பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜோதிமணி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






