என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் தடுப்பு தின நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் கலால் துணை ஆணையர் சத்தியப்பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடந்தது
- பூக்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று இரவு உற்சவர் ஆனந்த நடராஜர் ,சிவகாமி அம்பாள் சுவாமிகளுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூக்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவாய நம' என்ற கோஷத்தோடு நடராஜரை பக்தியோடு வழிபட்டு சென்றனர்.
- மாவட்ட ஊராட்சி குழு வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நாகராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள நூலகங்களுக்கும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் நினைவு நூலகம்' என பெயர் சூட்ட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள நூலகம் சிறப்பாக செயல்படும் வண்ணம் நூலகர் ஊதியம், அரசு போட்டி தேர்வு புத்தகங்கள் ஆகியவைகளை தமிழக அரசுடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் மூலம் பெற்று செயல்பட வைப்பது.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர், வேகாமங்கலம், உத்திரம்பட்டு, ஈராளச்சேரி ஆகிய கிராமங்களில் வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு அரசு மூலம் குடியிருப்பு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்க அரசிடம் வலியுறுத்துவது.
காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஓச்சேரி ஊராட்சியில் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 10 படுக்கை அறையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம், பொது சுகாதார துறை மூலம் ஏற்படுத்தி தருவது.
மாமண்டூர் கிராமத்தில் சமுதாய கூடம் கட்டிதர வேண்டியது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.
- ஈஸ்வரன் - சங்கீதா தம்பதிக்கு நேற்று திருமண நாள்.
- காயம் அடைந்த தஸ்வந்த் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (29). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு கிஷோர் (3½), தஸ்வந்த் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கிஷோர் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
ஈஸ்வரன் - சங்கீதா தம்பதிக்கு நேற்று திருமண நாள் ஆகும். இதையொட்டி காலை கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன், சங்கீதா, தஸ்வந்த் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு சென்றனர். கடப்பந்தாங்கல் அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த தஸ்வந்த் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பஸ் டிரைவரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமாக வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறி இதற்கு ஒரு முடிவு தெரியாமல் பிணத்தை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் உடற்தகுதி சங்கம், அர்னால்டு கிளாசிக் ஜிம் ஆகியவை இணைந்து நடத்திய மண்டல அளவிலான ஆணழகன் போட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
போட்டிக்கு சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பிச்சை முத்து தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஜிம்.ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
மண்டல அளவிலான இந்த ஆணழகன் போட்டியில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போட்டியாள ர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் முதல் பரிசாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூவி, 2-வது பரிசாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் , 3-வது பரிசாக ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் உடற்தகுதி சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.கே.குருநாதன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டி பரிசளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
- ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்
- ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நெகிழ்ச்சி
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2003-2005-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறைக் காவலர் சபரி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இவர்கள் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் ஆடல் பாடலுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி முடிவில் பிரிந்து செல்ல மனமில்லாமல் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பிரிந்து செல்லும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.
திரும்பிச் சென்ற பின்னர் நிகழ்ச்சி மேடை வெறிச்சோடியாக காணப்பட்டது.
- ஆரணி பகுதியில் சப்ளை பாதிப்பு
- உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அதிக அளவு குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் கட்டப்பட்டுள்ளது.
செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றில் ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குடிநீர் உறை கிணறு 2016-2017-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கிணற்றில் இருந்து தினமும் ஆரணி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த உறை கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடைந்த குழாய் வழியாக தினமும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது.
இதனால் ஆரணி பகுதியில் பல கிராமங்க ளுக்கு குடிநீர் சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்
- வருவாய் துறையினர் சமரசம்
நெமிலி:
நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக அக்னி வசந்த விழா நடைபெற்றுவந்தது. விழா கடைசி நாளான நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை 11 மணியளவில் கோடம்பாக்கம் வழியாக ஜலம் தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.
பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர்.
- பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே பஸ் மோதிய விபத்தில் சென்னை கார் கம்பெனி ஊழியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை ஊருக்கு வந்திருந்த ஈஸ்வரன் அவரது மனைவி சங்கீதா ( 28) மற்றும் மகன் தஸ்வந்த் (2) ஆகியோருடன் பைக்கில் ஆற்காடு நோக்கி சென்றார். கலவை ரோட்டில் உள்ள கடப்பந்தாங்கல் என்ற இடத்தில் வந்த போது வந்தவாசியில் இருந்து வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆற்காடு தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். விபத்து ஏற்பத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடல்களை எடுத்து செல்ல விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தை தவித்து வருகிறது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் விசாரணை
- ரூ.13 ஆயிரம் மதிப்புள்ளவை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் (வயது 62), என்பதும், மோட்டார் சைக்கிளில் பையில் மறைத்து சுமார் 14 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செப்டம்பர் மாதம் தொடங்க நடவடிக்கை
- ரூ.50 கட்ட ணமாக வசூலிக்கப்படும்
சோளிங்கர்,:
சோளிங்கர் மலை மீது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
இது ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கிய ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது.
இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம்,பெங்களூர், மைசூர்,சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர்.
சராசரியாக வார இறுதி நாட்களில் 3000 பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக கார்த்திகை தீப பூஜை காலங்களில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
மலையின் அடித்தளத்தில் இருந்து கோவிலுக்கு சென்றடைய 1,306 படிக்கட்டுகள் ஏறி சென்றடைய வேண்டும்.
இந்தக் கோவில் ஒழுங்கற்ற பாறைகளை கொண்ட மலை மீது அமைந்துள்ளதால் பக்தர்கள் நடந்து செல்வ தற்கு சிரமப்படுகின்றனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், சிறுவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது கடினமாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் பல ஆண்டுகளாக ரோப் கார் சேவை அமைக்க வேண்டும் என் இந்து சமய அறநிலைத்துறையிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த சேவை குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்கூறியதாவது:
ரோப் கார் சேவை அமைக்க 2010 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர் இதற்கான பணிகள் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தற்போது ரோப் கார் வசதி 750 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மலையின் அடித்தள உயரத்திலிருந்து கோவிலுக்கு சென்றடைய 430 மீ தூரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை 8 ரோப்-கார்கள் கொண்டதாக இருக்கும். 4 ரோப்-கார்கள் மேலே செல்வதற்கும் 4 ரோப் கார்கள் கீழே வருவதற்குமாக அமைக்கப்படுகிறது.
மேலும் 250 வாட் மின் திறனுடன் இயக்கப்படுகின்ற இந்த சேவையில் அவசரகால வசதிகளும் உள்ளன.
மொத்தம் 8 இருக்கைகளைக் கொண்டு இந்த ரோப்-கார் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.50 கட்ட ணமாக வசூலிக்கப்படும். மேலும் இந்த ரோப்-கார் வசதி வரும் செப்டம்பரில் நடைமுறைக்கு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
- வருகிற 28-ந் தேதி மாலைக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க இளைஞர் அணி ஒன்றிய, நகர,பேரூர் ஆகிய பகுதிகளுக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவை இணைத்து, விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஒட்டி , விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவர ங்களையும் தெளிவா கவும், முழுமையாகவும் நிரப்ப வேண்டும்.
ஏற்கனவே இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்பிற்கு வர விரும்பினால் அவர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






