என் மலர்
நீங்கள் தேடியது "Agni Spring Festival"
- பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- 22-ந்தேதி காலை துரியோதனன் படுகளம் நடக்கிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கி திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று 17-ந்தேதி கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட தபசு மரத்தில் அர்ச்சுனன் வேடமணிந்து நாடக நடிகர் உச்சியில் தபசு செய்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் வேண்டினார்.
இந்த பாசுபதாஸ்திரம் மகாபாரத போரில் கர்ணனை வெல்ல அஸ்திரம் ஆகும். இந்த தபசு மரத்தை சுற்றிவந்து திருமணமான பெண்கள் குழந்தைகள் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணம் வேண்டியும் சுற்றி வந்து வணங்கினர்.
முடிவில் குறவன் குறத்தி வேடத்தில் ஈசன் வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினார். வருகிற 22-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது.
மறுநாள் 23-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.
- சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை திரவுபதி அம்மனுக்கு பால் இளநீர் தேன் சந்தனம் மஞ்சள் போன்ற விசேஷ திரையவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அர்ஜுனர், திரவுபதி அம்மன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடி உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்.
இந்த அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்
- வருவாய் துறையினர் சமரசம்
நெமிலி:
நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக அக்னி வசந்த விழா நடைபெற்றுவந்தது. விழா கடைசி நாளான நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை 11 மணியளவில் கோடம்பாக்கம் வழியாக ஜலம் தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.
பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மகாபாரத அக்னி வசந்த விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு வீரகோவில் பகுதியில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த வாரம் தொடங்கி மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தினமும் பிற்பகல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு மகாபாரதக் கதையில் பீமனின் மகனான போத்ராஜா கல்யாணம் நடைபெற்றது. இதேபோல் நேற்று இரவில் திரவுபதியம்மன் கல்யாணம் நடைபெற்றது.
- 27-ந்தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரிய கொழப்பலூர் கிராமத்தில் திரெரோபதி அம்மன் கோவிலில் கடந்த 27ஆம் தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது.
இதைதொடர்ந்து நேற்று கோவிலின் முன்பு 40 அடி உயரமுள்ள பனை மரத்தில் 16 படிக்கட்டுகள் அமைத்து அர்ஜுனன், குறவன், குறத்தி, வேடம் அணிந்து நாடக கலைஞர்கள் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.
அப்போது குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண்கள் பனை மரத்தின் கீழே அமர்ந்தனர். அப்போது அர்ஜுனன் வேடமணிந்த நாடக கலைஞர் பனைமரத்தின் மேலே சென்று பூஜை செய்து மேலிருந்து எலுமிச்சம் பழங்களை பிரசாதமாக பெண்களுக்கு வழங்கினார்கள்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரிய கொழப்பலூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.






