என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரிய கொழப்பலூர் கிராமத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
பெரிய கொழப்பலூர் கிராமத்தில் அர்ஜுனன் தபசு
- 27-ந்தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரிய கொழப்பலூர் கிராமத்தில் திரெரோபதி அம்மன் கோவிலில் கடந்த 27ஆம் தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது.
இதைதொடர்ந்து நேற்று கோவிலின் முன்பு 40 அடி உயரமுள்ள பனை மரத்தில் 16 படிக்கட்டுகள் அமைத்து அர்ஜுனன், குறவன், குறத்தி, வேடம் அணிந்து நாடக கலைஞர்கள் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.
அப்போது குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண்கள் பனை மரத்தின் கீழே அமர்ந்தனர். அப்போது அர்ஜுனன் வேடமணிந்த நாடக கலைஞர் பனைமரத்தின் மேலே சென்று பூஜை செய்து மேலிருந்து எலுமிச்சம் பழங்களை பிரசாதமாக பெண்களுக்கு வழங்கினார்கள்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரிய கொழப்பலூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.






