என் மலர்
ராணிப்பேட்டை
- மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு
- கருப்பு உடை அணிந்திருந்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் முன்பு, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 'கோ பேக்' ஸ்டாலின் என்ற பெயரில் பா.ஜ.க வினர் கருப்பு உடை அணிந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு , தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் தேவையை பாதிக்கும் வகையில் மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், இதை பொருட்படுத்தாமல் எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சரையும் கண்டித்து பேசினார்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அறியும் வண்ணமும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காரை கூட்ரோடு பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி யையும், அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி களில் வெற்றிப் பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் 8 பேருக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம், 8 பேருக்கு 2-வது பரிசாக தலா ரூ.7 ஆயிரம் ,8 பேருக்கு 3-ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைக்கான காசோ லைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
புகைப்பட கண்காட்சி
தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமை க்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வை யிட்டு சென்றனர்.
இந்த கண்காட்சி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், நகரமன்ற தலைவர்கள் திருமதி.சுஜாதா வினோத், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயணிகள் கடும் அவதி
- புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்துக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்ப ரத்துக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்க ணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களின் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள புறநகர் மின்சார ரெயில் சேவையில் 54 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கும், பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை செல்லும் ரெயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.
- ஆடி அமாவாசை முன்னிட்டு நடந்தது
- வருகிற 26-ந் தேதி கருட ஜெயந்தி விழா நடக்கிறது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதரசுவாமிகளின் அருளானைப்படி உலக நன்மைக்காகவும்,சகல கார்யங்களில் வெற்றி பெறவும் வேண்டி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி மஹா யாகத்துடன் மஹா காளி யாகம், சூலினி துர்கா யாகம், வாராகி யாகம், திருஷ்டி துர்கா யாகம் என 5 யாகங்கள் நடைபெற்றது.
மிளகாய் வற்றல், கருங்காலி, புல்லுருவி, நவ சமித்துக்கள், கொப்பரைத் தேங்காய், நெல் பொரி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சௌபாக்ய திரவியங்கள், செந்நாயுருவி, கிராம்பு, வால் மிளகு, லவங்கம், போன்ற பல்வேறு திரவியங்களை கொண்டு நடத்தப்பட்ட யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கருட ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
கருட ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு மூல மந்திர ஹோமமும், நவ கலச திருமஞ்சன அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.23லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் மாணவிகளுக்கான சிகிச்சை அறை, தி.மு.க.ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.27லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 4 கட்டிடங்களுக்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ர ட்சகன், ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கல்லூரி நுழைவு வாயில், நூலகம், மாணவியர்களுக்கான சிகிச்சை அறை ஆகியவற்றை திறந்து வைத்து , குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
இதில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர் வினோத்காந்தி ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்க ட்ரமணன், வடிவேலு, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச் செல்வி உள்பட கல்லூரி பேராசிரி யர்கள், விரிவுரை யாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கலப்பளாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.
10-வது நாளாக நேற்று கலப்பளாம்பட்டு கிராமத்தில் விவசாயிகள் கருப்பு துணியால் வாயை கட்டிக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தியும், தேங்காய் உடைத்தும், பாலை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயற்கை விவசாயி பிரபாகரன் வரவேற்றார்.
இதில் உழவர்களின் விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய, சட்டம் இயற்ற வேண்டும். தென்னை, பனையில் கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
தேங்காய், கடலை, நல்லெண்ணைபோன்ற எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும்.
கோரிக்கை
கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு, 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.செய்ய வேண்டும். தேங்காய் ஒரு டன், 40 ஆயிரம் ரூபாய் என கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு, 3,000 ரூபாய், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாய், உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- 35-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு நடந்தது
- தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், வாலாஜாவில் பா.ம.க. கட்சி 35-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜானகிராமன், தலைவர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க . மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகைதீன், தலைமை நிலைய பேச்சாளர் தினபுரட்சி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில ,மாவட்ட ,நகர, ஒன்றிய கிளைகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் நன்றி கூறினார்.
- ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு
- பயணிகள் கடும் அவதி
அக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ெரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.
டிக்கெட் கவுண்டர்
இங்கு அதிவிரைவு ெரயில்களைத் தவிர, அனைத்து ரெயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு புறநகர் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில் நிலையத்தில் மொத்தமாக 5 டிக்கெட் கவுண்டர் உள்ளது. ஆனால் ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே தற்போது செய ல்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை என்பதால் சீசன் டிக்கெட், விடுமுறைக்கு அரக்கோணம் வந்து செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் டிக்கெட் வாங்க வருவதால் அதிக கூட்டம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இதையறிந்த நிலையிலும் ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திங்கட்கிழமை மட்டுமாவது கவுண்டர்களை அதிகரித்து பயணிகளுக்கு விரைவாக டிக்கெட் வழங்கி அவர்கள் குறித்த நேரத்திற்குள் ரயிலுக்கு செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஒரு சிலர் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலில் குறித்த நேரத்திற்க்குள் செல்ல முடியாமல் தவற விட்டனர். இதனால் அவர்கள் பதற்றத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி இனியாவது திங்கட்கிழமை களில் கூடுதல் கவுண்டர்களை திறந்து பயணிகள் அவர் செல்லக்கூடிய ரெயிலுக்கு குறித்த செல்ல உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- வனத்துறையினர் மீட்டனர்
- வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆம்பூர்:
ஆம்பூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் ்காட்டு எருமை, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, கரடி உள்ளிட்ட உயிரினங்கள்அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
வன விலங்குகள் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன.
மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் செல்வதில்லை. பல நேரங்களில் நாய் கடித்தும், வாகனங்களில் அடிப்பட்டு பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது.
இந்த நிலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதிக்கு 2 புள்ளி மாண்கள் தண்ணீர் தேடி வந்தன. அங்கு ரேசன் கடை எதிரே உள்ள வளாகத்தில் வனப்பகுதிக்கு திரும்பி செல்ல வழிதெரியாமல் சுற்றித்திரிந்தன.
இதுகுறித்து அந்த பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, 2 புள்ளி மான்களையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதுபோல் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
சென்னையிலிருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகல் வந்தே பாரத்ரெயில் புறப்பட்டு காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
வாலாஜாவை கடந்து முகுந்தராயபுரம் நோக்கி வந்தபோது மாலை 3.40 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.
அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெமிலி அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன், நெமிலி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெமிலி மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.இதில் பள்ளி மாணவர்கள் கஞ்சா, குட்கா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தகூடாது என்று அறிவுரை வழங்கினார்.
முன்னதாக மறைந்த முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருபாவதி, வழக்கறிஞர் ராஜேஷ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் டோல்கேட் பகுதியில், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கார்களை போலீசார் நிறுத்த முயன்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதை தொடர்ந்து போலீசார் கார்களில் சோதனை செய்தனர். அதில் தலா 2 டன் என மொத்தம் 4 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களுடன் கார்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், பட்டோலி பகுதியை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருசா(22) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






